சுதர்சன் பட்நாயக் மீது மர்ம நபர்கள் தாக்குதல்!

Monday December 04, 2017

ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல மணல் சிற்ப கலைஞரான சுதர்சன் பட்நாயக் மீது அடையாளம் தெரியாத நபர்கள் நடத்திய தாக்குதலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலம் புரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் சுதர்சன் பட்நாயக். கடற்கரை மணலில் இவர் உருவாக்கும் சிற்பங்கள் ஒவ்வொன்றும் பார்ப்போரை வியக்க வைக்கும். பத்மஸ்ரீ விருது வென்றுள்ள இவர் அடையாளம் தெரியாத நபர்களால் இன்று தாக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த தாக்குதலில் காயமடைந்த அவர் புரி மாவட்ட அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக சுதர்சன் அளித்த புகாரின் அடிப்படையில்  காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.