சுயம்வரம் பட இயக்குனர் சிராஜ் மரணம்!

யூலை 25, 2017

தமிழ் திரையுலகின் கின்னஸ் சாதனை படமான சுயம்வரம் படத்தை இயக்கிய இயக்குனர் சிராஜ் மாரடைப்பால் மரணமடைந்தார். கடந்த சில நாட்களாக நோயால் அவதிப்பட்டு வந்த சிராஜ் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 இந்நிலையில், நேற்றிரவு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு அவரது உயிர் பிரிந்தது. தகவல் அறிந்து திரைத்துறையினர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். 

சிராஜ் உடல் அடக்கம் நாளை மாலை சென்னையில் நடைபெற உள்ளது. நடிகர் ராமராஜன் நடித்த என்ன பெத்த ராசா, சுயம்வரம் உள்ளிட்ட பல படங்களை சிராஜ் இயக்கியுள்ளார்.

செய்திகள்