சுற்றுலா தூதராக பிரியங்கா சோப்ரா!

Sunday April 29, 2018

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் பிரியங்கா சோப்ரா, அசாம் மாநிலத்தின் சுற்றுலா தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.  பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் ஆங்கில டிவி தொடரிலும் நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ‘குவான்டிகோ’ தொடர் அமெரிக்காவில் பிரபலமானது. அதில் அலெக்ஸ் பாரிஷ் என்ற எஃப்.பி.ஐ ஏஜெண்டாக நடிக்கிறார்.

இதன் 3-வது சீசன் ஷூட்டிங் தற்போது நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இதன் படப்பிடிப்பின் போது விபத்து ஏற்பட்டதால் தற்போது படப்பிடிப்புக்கு செல்லாமல் ஓய்வு எடுத்து வருகிறார். 

இந்நிலையில், நடிகை பிரியங்கா சோப்ரா அசாம் மாநில சுற்றுலா தூதராக நியமிக்கப்பட்டுள்ளார். அசாம் மாநிலம் ஜோர்ஹாட் நகரில் நடந்த கோடை விழாவில் உள்ளூர் மக்களுடன் பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டார். அங்கு அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.