சுவிசில் உணர்வெழுச்சியுடன் முன்னெடுக்கப்பட்ட மே 18 - தமிழினஅழிப்புநாள்!

May 21, 2018

ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும்;,சிறிலங்கா அரசினால் மிகவும் திட்டமிடப்பட்டும், சர்வதேச நாடுகளின் அனுசரணையுடனும் தமிழர்கள் மீதுநடாத்தப்பட்டஇருபத்தியோராம்நூற்றாண்டின் அதியுச்ச இனப்பேரழிப்பு நடந்ததுமான தமிழீழத்தில், இறுதிவரை மண்டியிடாது போராடியமாவீரர்களுக்கும், மக்களுக்குமான ஒன்பதாம் ஆண்டு நினைவுகள் சுமந்தகவனயீர்ப்புநிகழ்வான,மே 18 -தமிழினஅழிப்புநாளானது 18.05.2018 வெள்ளிக்கிழமை  அன்று சிறப்பாக நடைபெற்றது. 

இதில் பலநூற்றுக்கணக்கில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள்  மிகவும் கனத்த இதயங்களுடன் வலி சுமந்த நினைவுகளை நெஞ்சினில் சுமந்து மிகவும் உணர்வு பூர்வமாககலந்து கொண்டிருந்தனர்.

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினால் நடாத்தப்பெற்ற   நிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன், சுவிஸ் மற்றும் தமிழீழ  தேசியக்கொடிகள் ஏற்றிவைக்கப்பட்டதனைத்  தொடர்ந்து  ஈகைச்சுடரேற்றல்  அகவணக்கத்துடன்சுடர், மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் சுவிசின்தொழிற்கட்சிசார்பில்பிரமுகர்கள்; கலந்துகொண்டுசிறப்புரையாற்றியதுடன்,சமகாலஅரசியல் தொடர்பானஎழுச்சியுரையுடன், இளையோர்களால் வேற்றினமக்களும் புரிந்துகொள்ளக் கூடியவகையில் ஜேர்மன்,பிரெஞ்சு, இத்தாலி,ஆகியமொழிகளில்; பேச்சுக்களும் இடம்பெற்றிருந்தன.

தமிழினஅழிப்புநாளினைமுன்னிட்டுஅனைத்துலகத் தொடர்பகவெளியீட்டுப்பிரிவினால் சிறப்புவெளியீடாகவலிகளின் மொழி  இறுவட்டுவெளியிட்டுவைக்கப்பட்டதுடன், இனஅழிப்புசார்ந்ததுண்டுப்பிரசுரங்களும் வேற்றினத்தவர்களுக்கு இளையோர்களால் வழங்கப்பட்டதுடன் இனஅழிப்புசார்ந்தும் தெளிவாகவும் ,விரிவாகவும் விளங்கப்படுத்தப்பட்டது.

நிகழ்வில் தமிழினஅழிப்புசார்ந்த,தமிழினஅழிப்பிற்குநீதிகேட்கும் வகையிலானபதாதைகளைத் தாங்கியசுவிஸ் வாழ் தமிழ்மக்கள்; எமது உணர்வுகளை ஆற்றாமையோடு வெளிப்படுத்தியதோடுநாம்  அனைவரும் ஒற்றுமையாகதாயகம் நோக்கிதொடர்ந்துபயணிப்போம் என்றஉறுதிமொழியுடன் நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்துசுவிஸ் நாட்டின் கொடியுடன் தமிழீழத் தேசியக்கொடியும் இறக்கப்பட்டு,தமிழர்களின் தாரகமந்திரத்துடன்  வலிகளிலிருந்து வலிமைபெறுவோம்! உறுதி கொள்வோம்! உரிமைமீட்போம்!| என்ற உணர்வுடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றது. 

 

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் June 19, 2018

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...

வெள்ளி June 15, 2018

தமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத

வெள்ளி June 15, 2018

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....