சுவிசில் தமிழின உணர்வாளர்களின் நான்கு முனைமுற்றுகை!

Friday October 12, 2018

சுவிசில்  தாயக உறவுகளுக்கானஅபிவிருத்தி" என்றபோர்வையில் நேற்று (11.10.2018) நடைபெறவிருந்த தமிழினவழிப்பு அரசின் வடமாகாண சூத்திரதாரி ரெஜினோல்ட் கூரேயுடனான சந்திப்பானது  தமிழின உணர்வாளர்களின் நான்கு முனைமுற்றுகையினால்  சுவிஸ் காவற்துறையினரால் முற்றாக நிறுத்தப்பட்டது!

முள்ளிவாய்க்காலில் எம்மினத்தைதிட்டமிட்டுகொன்றொழித்தசிங்களப் பேரினவாதம்இஒட்டுமொத்ததமிழினவழிப்பை மூடிமறைக்கவும் இதமிழர்களின் உரிமைகளைநசுக்கவும், சர்வதேசஅரங்கில் தமிழர்களின் ஒற்றுமையை பலவீனப்படுத்தி தமிழீழ விடுதலைப் போராட்டத்தையும் அதன் எழுச்சியின் வீச்சையும் புலம்பெயர் தேசங்களில் இல்லாதொழிக்கவும் புலம்பெயர் தமிழ்மக்கள் மத்தியில் தனது சூழ்ச்சியான வேலைத் திட்டங்களை அபிவிருத்தி என்ற போர்வையில் செய்யமுனைப்புக்காட்டிவருகின்றது.

இந்த திட்டமிட்ட நிகழ்ச்சிநிரலின்  ஓர் அங்கமாகவே, சுவிஸ் பேர்ண் மாநிலத்தில்  வடதழிழீழத்தின் சிங்கள ஆக்கிரமிப்பு அரசின் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே உள்ளிட்டகுழுவினருடனானகலந்துரையாடல் ஒன்றுஎமதுமக்களின் அமைப்பான“ புங்குடுதீவுமக்கள்  விழிப்புணர்வுஒன்றியத்தின்“பேரில் தன்முனைப்புஅதிகாரங்களுடன் இயங்கும் நிர்வாக தலைவரினால் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தபோதிலும்  இக் கலந்துரையாடலைவர்த்தகப் பெருமக்கள் மற்றும் புங்குடுதீவு இனமானதமிழ்மக்களோடு சுவிஸ் வாழ் அனைத்துதமிழ் மக்களும் இணைந்து புறக்கணித்தமையானது முள்ளிவாய்க்காலில்  எமது  இனம் வீழ்த்தப்படவில்லை ஈழத்தமிழினம்;; இன்னும் உயிர்ப்புடனும் ,நிமிர்வுடனும், தாயகவிடுதலைக் கனவுடனும்தான் உள்ளது என்பதை இவர்களுக்குஉணர்த்தியுள்ளமைக் குறிப்பிடத்தக்கதாகும்


இச்சந்திப்பானதுநடைபெறவிருந்த இடத்தின் நான்குமுனைகளும் தமிழினஉணர்வாளர்களினால்  முற்றுகையிடப்பட்டது. 
போராட்டத்தின் கூர்மையையும் மக்களின் உணர்வையும் உணர்ந்தசுவிஸ் காவற்துறையானது இச்சந்திப்பை முற்றாகநிறுத்தியதோடு, கூடிநின்ற அனைவரையும் அமைதியாக கலைந்து செல்லுமாறு கேடகப்பட்டதுக்கமைவாக  மக்கள் அனைவரும் மெதுமெதுவாகபோராட்டகளத்தைவிட்டுகலைந்துசென்றனர்.

எமது சர்வதேசபலத்தையும்இதமிழ் மக்களின் ஒருங்கிணைந்தபலத்தையும்சிதைக்கும் சிறிலங்கா பேரினவாத அரசின்நயவஞ்சகநோக்கங்களைபுரிந்துகொள்வதோடு,சிங்களப் பேரினவாதிகளால் திட்டமிட்டு செயற்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கும் இப்படியானசந்திப்புகளைஅனைத்துதமிழ் மக்களும் தொடர்ச்சியாகப் புறக்கணிப்பதோடு அவர்கள் எங்கெல்லாம் கூடுகின்றனரோஅங்கெல்லாம் இனமானத்தமிழராய் அணிதிரண்டு இனப்படுகொலையாளர்களின் முகத்திரையைகிழிக்கவேண்டுமெனவும் இத்தருணத்தில் அறைகூவல் விடுக்கின்றோம்.

மிகக்குறுகியகாலப்பகுதிக்குள் (இருபதுமணித்தியாலங்கள்)எம்மால் அறிவித்தல் விடுக்கப்பட்டபோதும் இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பெருமளவில் கலந்துகொண்டு  தமதுவலுவானஉணர்ச்சிமிக்க எதிர்ப்பினைகாட்டிய இனமானத் தமிழ் மக்களுக்கும்,மிகவும் கண்ணியத்துடன் எமதுஉணர்வுகளை மதித்து தமது கடமைகளைச் செய்த சுவிஸ் காவற்துறையினருக்கும் எமது வாழ்த்துக்களையும்,பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சுவிஸ்தமிழர் ஒருங்கிணைப்புக் குழு