சுவிசில் நடைபெற்றதியாகதீபம்;அன்னைபூபதி அம்மாவின் நினைவுகள் சுமந்தவிளையாட்டுப் போட்டிகள் 2018!

June 03, 2018

தேசத்தின் விடுதலைக்காக உண்ணா நோன்பிருந்துதன் உயிர்தந்ததியாகதீபம்;அன்னைபூபதிஅம்மாஅவர்களின் 30ம் ஆண்டு நினைவினை முன்னிட்டுநடாத்தப்பட்ட22வது விளையாட்டுப் போட்டிகளானது 27.05.2018 மற்றும் 02.06.2018 ஆகிய இரு தினங்களில் சூரிச் மற்றும் இவர்டோன் மைதானங்களில்; சிறப்பாகநடைபெற்றன. 

சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக் குழுவின் விளையாட்டுத்துறையினால் நடாத்தப்பட்ட போட்டிகளானது பொதுச்சுடரேற்றலுடன்,   தமிழீழத் தேசியக் கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச் சுடரேற்றல், அகவணக்கம், மலர்வணக்கத்துடன் ஆரம்பமானது. 

எதிர்கால சந்ததியினரிடம் தமிழ்த்தேசிய உணர்வை,ஒற்றுமையை பேணிப்பாதுகாக்கவும்,தாயகம் நோக்கிய தேடலை உண்டுபண்ணும் நோக்கிலும் ஒழுங்கமைக்கப்பட்ட இவ் விளையாட்டுப்போட்டியில்; உதைபந்தாட்டம், துடுப்பாட்டம், கரப்பந்தாட்டம், மெய்வன்மையாளர் போட்டிகள், பார்வையாளர் போட்டிகள் போன்ற அனைத்து விதமான போட்டிகளும் ஆரம்பிக்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்றதுடன் பல விளையாட்டுக்கழகங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான போட்டியாளர்கள் பங்குபற்றியிருந்தமையும்குறிப்பிடத்தக்கதாகும். 

வெற்றிபெற்றவீரர்களுக்கும்,கழகங்களைச் சேர்ந்த வீரர்களுக்கான பதக்கங்களும், வெற்றிக்கிண்ணங்களும் வழங்கி மதிப்பளிக்கப்பட்டதனைத் தொடர்ந்துதமிமீழத் தேசியக்கொடி இறக்கப்பட்டுதமிழர்களின் தாரக மந்திரத்துடன் போட்டிகள் நிறைவடைந்தன .இவ் விளையாட்டுப்போட்டிகள் சிறப்பாக நடைபெற உதவியஅனைவருக்கும்  எமதுவாழ்த்துக்களையும் ,பாராட்டுதல்களையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.

சுவிஸ் தமிழர்ஒருங்கிணைப்புக் குழு

இணைப்பு: 
செய்திகள்
வியாழன் August 16, 2018

வள்ளிபுனம் செஞ்சோலை சிறுவர் வளாகத்தின் மீது சிறீலங்கா வான்படை 14.08.2006 அன்று மேற்கொண்ட இனவழிப்புத் தாக்குதலில் பலியான 61 மாணவிகளின் 12 வது ஆண்டு நினைவு நாளும் , தமிழீழ மக்களுக்காய் தன் உடலில் தீ

செவ்வாய் August 07, 2018

தமிழினத்திற்கு முகமும், முகவரியும் தந்த தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை ஈன்றெடுத்த அன்னை பார்வதியின் பிறந்த நாளை தமிழீழ தாயகத்திலும், புலம்பெயர் தேசங்களிலும் உள்ள ஈழத்தமி

வெள்ளி யூலை 27, 2018

 TELO  நடாத்தும் கறுப்பு யூலை நிகழ்விற்கும் எமதமைப்புக்கும் (TCC) எந்த வித தொடர்பும் இல்லை