சுவிஸில் கிளிநொச்சியைச் சேர்ந்த அகதி சுட்டுக் கொலை!

ஒக்டோபர் 08, 2017

சுவிட்சர்லாந்தின் பிரிசாகோ நகரில் உள்ள அகதிகள் நிலையம் ஒன்றில் நேற்று அதிகாலையில் சுவிஸ் காவல்துறையினரால் ஈழ தமிழ் அகதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

அகதிகள் நிலையத்தில் தங்கியிருந்தவர்கள் மத்தியில் மோதல்கள் இடம்பெறுவதாக கிடைத்த தகவலை அடுத்து நேற்று அதிகாலை 2 மணியளவில் சுவிஸ் காவல்துறை அதிகாரிகள் இரண்டு அகதிகளை அழைத்துக் கொண்டு  அங்கு சென்றனர்.

அப்போது அகதிகள் நிலையத்தில் இருந்த 38 வயதுடைய ஈழ  தமிழ் அகதி ஒருவர், இரண்டு கத்திகளுடன், காவல்துறையினர் கூட்டிச் சென்ற இரண்டு அகதிகளையும் தாக்க முயன்றார்.

உடனடியாக காவல்துறை அதிகாரி நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கத்தியுடன் இருந்த ஈழ  தமிழ் அகதி மரணமானார். ரிசினோ மாகாணத்தில் உள்ள பிரிசாகோ நகரில் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. இந்தச் சம்பவம் தொடர்பாக, சுவிஸ் சட்டமா அதிபர் பணியகம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே,துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் கிளிநொச்சியைச் சேர்ந்தவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

செய்திகள்
திங்கள் செப்டம்பர் 17, 2018

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்

திங்கள் செப்டம்பர் 17, 2018

இலங்கையின் கொடிய அரசின்  இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம

ஞாயிறு செப்டம்பர் 16, 2018

சேர்ஜி தமிழ்ச்சோலையில் நேற்று தியாக தீபம் திலீபனின்  31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.  

புதன் செப்டம்பர் 12, 2018

கலைபண்பாட்டுக்கழகம் டென்மார்க் 10.09.18 அன்று உத்தியோகபூர்வமாக “அகம்” கலையகத்தை திறந்து வைத்துள்ளனர்.  

புதன் செப்டம்பர் 12, 2018

ஈழ தமிழ் பெண் சுபா உமாதேவன் சுவிட்சர்லாந்தின் சிறுவர் உரிமைகள் மற்றும் உதவி திட்ட சர்வதேச அமைப்பின் 

புதன் செப்டம்பர் 12, 2018

தமிழின அழிப்புக்கு நீதி கோரி தமிழ் மக்களின் விடிகின்ற நாளுக்காய் ஐநா நோக்கிய ஈருருளிப் பயணம் மற்றும் தமிழ் வான் கண்காட்சி ஊர்திப் பயணம் மிக எழுச்சியாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது.