சுவிஸ் பேர்ண் நாடாளுமன்றம் முன்றலில் மே 18 - தமிழினஅழிப்புநாள்!

May 19, 2017

ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும்;,சிறிலங்கா அரசினால் மிகவும் திட்டமிடப்பட்டும், சர்வதேச நாடுகளின் அனுசரணையுடனும் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட இருபத்தியோராம்நூற்றாண்டின் அதியுச்ச இனப்பேரழிப்புநடந்ததுமானதமிழீழத்தில், இறுதிவரைமண்டியிடாது போராடியமாவீரர்களுக்கும், மக்களுக்குமான எட்டாம்ஆண்டுநினைவுகள் சுமந்தகவனயீர்ப்பு நிகழ்வான,மே 18 -தமிழினஅழிப்புநாள்பேர்ண்ள நாடாளுமன்றம் முன்றலில்18.05.2017வியாழக்கிழமைஅன்றுநடைபெற்றது.

இதில்பலநூற்றுக்கணக்கில் சுவிஸ் வாழ் தமிழ்மக்கள்  மிகவும் கனத்த இதயங்களுடன் வலிசுமந்த நினைவுகளை நெஞ்சினில் சுமந்து மிகவும் உணர்வுபூர்வமாககலந்து கொண்டிருந்தனர்.

சுவிஸ் ஈழத்தமிழரவை,தமிழ் இளையோர்,தமிழ்ப் பெண்கள் அமைப்புக்களின் கூட்டிணைவில் நடைபெற்ற கவனயீர்ப்புநிகழ்வானது பொதுச்சுடரேற்றலுடன்,சுவிஸ் மற்றும் தமிழீழத் தேசியக்கொடிகள்ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்துஈகைச்சுடரேற்றல்இஅகவணக்கத்துடன்சுடர்,மலர் வணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வில் முள்ளிவாய்க்கால் இறுதிநாட்களில் எமதுஉறவுகள் பலசிரமங்களுக்குமத்தியிலும் தமது பசியாற ஒருநேர உணவுக்கு வழியின்றி உப்பு,பால் இல்லாதகஞ்சிஉண்டு பசியாறியதைநினைவுகூரும் அடையாளமாக கலந்துகொண்டவர்களுக்கு கஞ்சிவழங்கப்பட்டதுடன்;சுவிசின் கட்சிகளிலிருந்துபிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்புரைகளாற்றியதுடன் சமகாலஅரசியல் தொடர்பானஎழுச்சியுரையுடன், இளையோர்களால்வேற்றினமக்களும் புரிந்துகொள்ளக் கூடியவகையில் ஜேர்மன்,பிரெஞ்சு, இத்தாலி,ஆங்கிலம் ஆகியமொழிகளில்; பேச்சுக்கள் இடம்பெற்றிருந்ததுடன் இன அழிப்புசார்ந்ததுண்டுப்பிரசுரங்களும் வேற்றினத்தவர்களுக்கு இளையோர்களால் வழங்கப்பட்டதுடன் இனஅழிப்புசார்ந்துவிளங்கப்படுத்தப்பட்டது.

நிகழ்வில் தமிழினஅழிப்புசார்ந்த,தமிழினஅழிப்பிற்குநீதிகேட்கும் வகையிலானபதாதைகளைத் தாங்கியசுவிஸ் வாழ் தமிழ்மக்கள்; மதுஉணர்வுகளை ஆற்றாமையோடு வெளிப்படுத்தியதோடு நாம் அனைவரும் ஒற்றுமையாகதாயகம் நோக்கிதொடர்ந்துபயணிப்போம் என்றஉறுதிமொழியுடன் நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்துசுவிஸ் நாட்டின் கொடியுடன் தமிழீழத் தேசியக்கொடியும் இறக்கப்பட்டு,தமிழர்களின் தாரகமந்திரத்துடன்  வலிகளிலிருந்து வலிமைபெறுவோம்!  உறுதி கொள்வோம்!உரிமைமீட்போம்!| என்றஉணர்வுடன் நிகழ்வுகள் எழுச்சியுடன் நிறைவுபெற்றது. 

இணைப்பு: 
செய்திகள்
செவ்வாய் June 19, 2018

நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடல் ஒலித்து, தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் நிறைவு...

வெள்ளி June 15, 2018

தமிழீழதேசத்தையும் அதன் விடுதலையையும் நேசித்து தமிழ் மக்களுக்கான மனிதநேயப் பணிகளை முன்னெடுத்த மனிதநேயச் செயற்பாட்டாளர்கள் மீது சனவரி 2011ம் ஆண்டு சுவிற்சர்லாந்து அரசதரப்பு வழக்குரைஞரால் குற்றம் சுமத

வெள்ளி June 15, 2018

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை குற்றவியல் அமைப்பாக அறிவித்து, செயற்பாடுகளை முடக்கி தமிழீழ மக்களின் விடுதலைப்போரட்டத்தை....