சுவிஸ் Vaud மாநிலத்தின் பல்கலைக்கழகத்தில் தமிழினவழிப்பு சார்ந்த விழிப்புணர்வுக் கருத்தரங்கு - தமிழர் இயக்கம்

May 08, 2018

சுவிஸ் Vaud மாநிலத்தின் பல்கலைக்கழகத்தில் இன்று 7.6.2018 காலை 10 மணிதொடக்கம் இலங்கையில் தொடரும் தமிழின அழிப்பு தொடர்பாகவும், தமிழர்கள் சுவிஸ் நாட்டிற்கு புலம்பெயரக் காரணமாகவிருந்த இலங்கை அரசின் கொடிய இனவழிப்பு யுத்தம் சார்ந்தும் கருத்தரங்குகள் இடம்பெற்றது. 

காலையும், மாலையும் இரு பிரிவுகளாக விருப்பத்துடன் கலந்துகொண்ட 150 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் தமிழினம் எதிர்நோக்கும் கொடிய தமிழினவழிப்பு பற்றிய வடுக்கள் நிறைந்த செய்திகளை அறிந்ததுடன் தமது உள்ளக் கிடக்கைகளைப் பகிர்ந்து கேள்விகளும் கேட்டார்கள்.

இக் கருத்தரங்கில் தமிழர் இயக்கத்தின் யெனீவா மாநிலச் செயற்பாட்டாளர் காண்டீபன் அவர்கள் தமிழினவழிப்பு பற்றிய விரிவான Power Point Presentation ஒன்றை தயாரித்து விளக்கமளித்ததுடன் கேட்கப்பட்ட பல கேள்விகளுக்கும் பதில்களை வழங்கியிருந்தார்.

குறிப்பாக தான் எவ்வாறு ஓர் அகதி ஆக்கப்பட்டேன் என்ற வடுக்கள் நிறைந்த நினைவுகளையும் மாணவர்களுடன் பகிர்ந்துகொண்டார்.

இச் செயற்பாடானது தமிழர் இயக்கத்தின் செயற்பாட்டாளர் காண்டீபன் அவர்களால் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக பிரெஞ்சு மொழியில் சுவிஸின் பிரெஞ்சு மொழி பேசும் மாநிலங்களில் செயற்படுத்தப்பட்டுவருகிறது.

இணைப்பு: 
செய்திகள்
புதன் செப்டம்பர் 19, 2018

சிறிலங்காப்பேரினவாதஅரசினால் தொடர்ச்சியாகதமிழ் மக்கள் மீதுமேற்கொள்ளப்பட்டுவரும் இன அழிப்பிற்கு நீதிகேட்டு ஐ.நா நோக்கிய பொங்குதமிழ் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான தமிழ்மக்கள் கலந்து கொண

திங்கள் செப்டம்பர் 17, 2018

தமிழ்ச்சோலைத் தலைமைப் பணியகம் பிரான்சு, தமிழ் இணையக் கல்விக்கழகம்

திங்கள் செப்டம்பர் 17, 2018

இலங்கையின் கொடிய அரசின்  இனவழிப்புக்கு நடவடிக்கைக்கை நீதி கோரியும் சர்வதேசத்துக்கு அழுத்தம் கொடுக்கும் நோக்கத்துடனும் இன்று (17.09.2018 ) சுவிஸ்லாந்து நாட்டின் ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஈகத்தியாகி ம