'சூப்பர் நிலவு' 70 ஆண்டுக்குப் பிறகு வானில்

திங்கள் நவம்பர் 14, 2016

70 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே விண்ணில் ஏற்படும் ‘சூப்பர் நிலவு’ ஸ்‌பெயின் நாட்டில் தெரிய தொடங்கியுள்ள்து. பூமியின் ஒரே துணைக்கோளான நிலா வழக்கத்தை காட்டிலும் சற்று பெரியதாக காட்சி அளிப்பதை அறிவியல் வல்லுநர்கள் ‘சூப்பர் நிலவு’ என அழைக்கிறார்கள்.

 இந்த அதிசய நிகழ்வில் நிலா வழக்கத்தை விட 14 சதவீதம் பெரியதாகவும், 30 சதவீதம் அதிக ஒளியுடனும் பிரகாசமாக தோன்றும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 1948 ஆம் ஆண்டு சூப்பர் நிலவு தோன்றியதாகவும், அதன்பின்னர் இன்று மீண்டும் தோன்றி உள்ளதாகவும் நாசா தெரிவித்துள்ளது.  வானம் தெளிவாக இருக்கும் பட்சத்தில் வெறும் கண்களாலேயே சூப்பர் நிலவை இன்றிரவு பார்க்கலாம் எனவும் ஒருவேளை சூப்பர் நிலவை பார்க்க முடியாவிட்டால் அடுத்த மாதம் 14-ஆம் தேதி மீண்டும் சூப்பர் நிலவு நிகழும் என நாசா தெரிவித்துள்ளது.