சூரிய ஒளி மூலம் தண்ணீர் சுத்திகரிப்பு- விஞ்ஞானிகள் சாதனை

Monday May 07, 2018

சூரிய ஒளியை பயன்படுத்தி புதிய தொழில் நுட்பத்தின் மூலம் விஞ்ஞானிகள் தண்ணீர் சுத்திகரிப்பு முறையை கையாண்டு சாதனை படைத்துள்ளனர்.  எந்திரம் மூலம் தண்ணீர் சுத்திகரிக்கப்பட்டு வரும் இந்த காலத்தில் தற்போது சூரிய ஒளியை பயன்படுத்தி புதிய தொழில் நுட்பத்தின் மூலம் குடிநீரை விஞ்ஞானிகள் சுத்திகரித்துள்ளனர்.

கடந்த 2000 ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்க தத்து இயல் விஞ்ஞானி அரிஸ்பாட்டில் தண்ணீரை சுத்திகரிக்க புதிய முறையை கையாண்டார். முக்கோன வடிவிலான கறுப்பு நிற கார்பன் பேப்பரை தண்ணீரில் மூழ்கடித்து அதை சுத்திகரித்தார்.

அதைத் அடிப்படையாக கொண்டு சூரிய ஒளியை பயன்படுத்தி புதிய தொழில் நுட்பத்தின் மூலம் விஞ்ஞானிகள் தண்ணீர் சுத்திகரிப்பு முறையை கையாண்டு வெற்றி பெற்றுள்ளனர்.

மிக குறைந்த செலவில் இதை செயல்படுத்த முடியும். இயற்கை பேரிடர் காலங்களில் இது மிகவும் உதவிகரமாக இருக்கும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.