சூரிய சந்திரருக்கிடையில் இன்று என்ன இரகசிய ஒப்பந்தமா ?
வியாழன் பெப்ரவரி 01, 2018

“சூரிய சந்திரருக்கிடையில்
இன்று என்ன
இரகசிய ஒப்பந்தமா ?
காணவில்லை வானில் !”
நட்சத்திரங்கள் கூட
ஓய்வெடுக்க சென்று விட்டனவா ?
வெறிச் சோடிப்போய் வானம்
அமைதியாக இருக்கிறதே
பொறிந்து
விழப் போகிறதா ?
தலையில்
அச்சம் கொள்கிறது மனம்
“கடல் கூட
சுனாமிக்கு முன்னம்
அமைதியாகத் தானே இருந்ததாம்,
அகிர்தினைகள் மட்டும்
எட்ட போய் விட்டனவாம்,
இன்றும் அகிர்தினைகளை
காணோம் வானில்”
அமைதி கூட
ஒரு வில்லங்கமான பேர்வழி தான் .
அமைதி கொள்ள மறுக்கிறது மனம்
வானத்துக்கு
பயந்து எங்கே போய் ஒழிப்பது ?
போருக்கு
பயந்து முள்ளி வாய்களில்
ஒழித்தது போல
அங்கலாய்ப்புடன்
அமைதி கொள்ள மறுத்தது
வெகுளி மனம்!
இணுவை சக்திதாசன்