சென்னையில் ஈழத்தமிழ் அகதி மரணம் - அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவு!

புதன் செப்டம்பர் 09, 2015

தமிழக காவல்துறையினரின்  பாதுகாப்பில் இருந்த இலங்கை அகதியின் சந்தேகத்திற்கிடமான மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தமிழக அரசாங்கத்தைக் கோரியுள்ளது.

 

தமிழகத்தின் பள்ளிக்கரனை பொலிஸாரின் பாதுகாப்பில் இருந்தபோது கடந்த 4 ஆம் திகதி 45 வயதான மோகன் எஇலங்கையின் தமிழ் அகதியொருவர் உயிரிழந்திருந்தார்.

 

இந்த மரணத்திற்கு தமிழக பொலிஸார் பொறுப்புக்கூற வேண்டும் எனவும் உயிரிழந்தவரின் உடலில் காயங்கள் காணப்படுவதாகவும் தெரிவித்து தமிழகத்தின் சில பகுதிகளில் போராட்டங்களும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.

 

இந்த நிலையிலேயே இந்தியாவின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு தமிழக அரசாங்கத்திற்கு அறிவித்தல் பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கமையஇ இலங்கை அகதியின் மரணம் தொடர்பில் 4 வாரங்களுக்குள் தகவல்களை சமர்ப்பிக்குமாறு தமிழகத்தின் முதன்மைச் செயலாளர் மற்றும் தமிழக பொலிஸ் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.