சென்னையில் மூன்றாம் ஆண்டு உலகத் தமிழர் திருவிழா

January 08, 2017

ஈழம், மலேசியா, சிங்கபூர் உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களின் கல்வியை மேம்படுத்த இந்திய மத்திய அரசு, உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள் உதவ வேண்டும் என சென்னையில் நடைபெற்ற உலகத் தமிழர் திருவிழாவில் வலியுறுத்தப்பட்டது. 

உலக தமிழர் திருநாள், உலக தமிழ் வம்சாவளியினர் ஒன்று கூடும் நிகழ்ச்சி ஆகியவை சென்னையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

இதில் வி.ஐ.டி. பல்கலைக்கழக முதல்வர் ஜி.விசுவநாதன் உரையாற்றிய போது, உலகில் எந்தெந்த நாடுகளில் நல்ல கல்வி போதிக்கப்படுகிறதோ அங்குள்ள மக்கள் வளமுடன் உள்ளனர். 

மலேசியாவில் கடந்த 1957 ஆம் ஆண்டில் 40 சதவீத தமிழர்கள் நல்ல கல்வியைப் பெற்றிருந்தனர். ஆனால் தற்போது அது 2 சதவீதமாகக் குறைந்துவிட்டது. அந்த நாட்டில் வேலை வாய்ப்பு பெற்ற தமிழர்கள் 8 சதவீதம் உள்ளனர். ஆனால் சிறையில் இருப்பவர்களின் எண்ணிக்கை 60 சதவீதமாக உள்ளது. 

பிற நாடுகளில் வாழும் தமிழர்களுக்கு சிறந்த கல்வியும், வேலைவாய்ப்பும் இல்லாவிட்டால் அவர்களது நிலை எப்படி இருக்கும் என்பதற்கு இதுவே சான்று. தமிழர்கள் வசிக்கும் 50 -க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழ்ப் பாடசாலைகள் அதிக அளவில் தொடங்க இந்திய மத்திய அரசும், தமிழ் அமைப்புகளும் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். 

இந்த திருவிழாவில் உலகமெங்கும் உள்ள தமிழ் சட்டமன்ற¸ நாடாளுமன்ற உறுப்பினர்கள்¸ துணை முதல்வர்கள்¸ சபா நாயகர்கள்¸ மத்திய அமைச்சர்கள்¸ நகர முதல்வர்கள் போன்றவர்களும் தொழிலதிபர்கள்¸ அறிவியலாளர்கள்¸ கல்வியாளர்கள்¸ கலை¸ கலாச்சாரம்¸ மின்னியல்¸ கணினிதுறை வல்லுனர்கள்¸ சமூக மற்றும் ஊடக துறை சார்ந்தவர்கள் கலந்து சிறப்பித்தனர். 

இந்த நிகழ்விற்கு சிறீலங்காவில்  இருந்து அதிதியாக கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கலந்துக் கொண்டார். 

இதன் போது இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் உட்பட ஏற்பாட்டு குழுவினாரல் இராஜாங்க அமைச்சர் கௌரவிக்கபட்டதுடன். நினைவு சின்னம் ஒன்றும் வழங்கபட்டது. 

இந்த விழாவில் ஆடை திருவிழா¸ பாரம்பரிய உணவு திருவிழா¸ கலை மற்றும் கலாச்சார திருவிழா¸ தொழில் முனைவர்கள்¸ D2D கலந்தாய்வு பெண்கள் முன்னேற்றத்திற்கான சுய உதவிகுழுக்கள் கலந்தாய்வு¸ புதிய தொழில் தொடங்க தொழில் அதிபர் சந்திப்பு¸ போன்றவைகள் உள்ளடங்கிய தமிழ் திருவிழா நடைபெறற்து. 

இதில் மலேசியா¸ சிங்கபூர்¸ இலங்கை¸ கனடா¸ மொரிஷியஸ்¸ மியான்மர்¸ ஜரோப்பா¸ பிரான்ஸ்¸ வளைகுடா நாடுகளில் உள்ள 1000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். 

இந்த விழாவில் உலகத் தமிழர்களை கௌரவிக்கும் வகையில் சாதனை தமிழன் விருது தமிழக ஆளுநர் முன்னிலையில் வழங்கப்பட்டது.  உலகமெங்கும் உள்ள தமிழர்களை ஒரே இடத்தில் சந்திக்கவும் தமிழர்கள் மேம்பாட்டில் எவ்வாறு வளர்ச்சி அடையவும் பின் தங்கி உள்ளவர்களுக்கு கல்வியில் உதவி செய்வது¸ தொழில் முனைவோருக்கு சந்தைப்படுத்த பயிற்சி அளிப்பது¸ புதிய தொழில் கொள்கை அறிமுகப்படுத்துவது போன்ற விடயங்கள் கவனத்தில் கொள்ளப்பட்டன. 

அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த ஏற்பாடுகளை உலகத் தமிழர் வர்த்தக சங்க தலைவர் செல்வகுமாரினால் ஒருங்கிணைக்கபட்டது. 

செய்திகள்
வியாழன் August 17, 2017

உ.பி.யில் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற முன்னாள் முதல்-மந்திரி அகிலேஷ் யாதவை,  காவல்துறை தடுத்து நிறுத்தி

வியாழன் August 17, 2017

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணைக் குழு  அமைக்கப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார்.

வியாழன் August 17, 2017

உத்திரப் பிரதேசத்தின் கோரக்பூர் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் கொடுக்கப்படாமல் 63 குழந்தைகள் மரணித்த நிகழ்வு ஒரு பச்சைப் படுகொலை.