சென்னை அமெரிக்க தூதரகத்திற்கு மாணவர் அமைப்புகள் எச்சரிக்கை கடிதம்!

செவ்வாய் செப்டம்பர் 01, 2015

இலங்கையில் நடந்ததாக கூறும் மனித உரிமை மீறல் பற்றின விசாரணையை இலங்கையே விசாரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் நிலைபாட்டை 100 மணிநேரத்தில் திரும்ப பெற வேண்டியும் இலங்கையில் சர்வதேச சுதந்திர இனப்படுகொலை விசாரணையை கொண்டு வரவேண்டியும் இன்று நமது தோழமை இயக்கங்கள் மற்றும் அமைப்புகளால் ,சென்னை அமெரிக்க தூதரகத்தில் மனு மற்றும் எச்சரிக்கை கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது.

 

பங்கெடுத்த இயக்கங்கள்
இளைய தலைமுறை கட்சி
தமிழ்நாடு மாணவர் இயக்கம் 
பாலச்சந்திரன் மாணவர் இயக்கம்
மறுமலர்ச்சி நாம் தமிழர் இயக்கம் 
தமிழ் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் கூட்டமைப்பு - திருவண்ணாமலை மாவட்டம்.