சென்னை டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்!

யூலை 06, 2018

சென்னையில் உள்ள டிஜிபி அலுவலகத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததையடுத்து, அலுவலக வளாகத்தில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 

சென்னை கடற்கரை சாலையில் தமிழக காவல்துறை தலைமை இயக்குனர் (டிஜிபி) அலுவலகம் உள்ளது. பாதுகாப்பு மிகுந்த இந்த அலுவலத்திற்குள் வெடிகுண்டு வைத்திருப்பதாக இன்று மிரட்டல் வந்துள்ளது. காவல்துறையின் கட்டுப்பாட்டு அலுவலகத்திற்கு தொலைபேசியில் பேசிய மர்மநபர், வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறிவிட்டு தொடர்பை துண்டித்துள்ளான். 

இதனையடுத்து காவல் துறை  உஷார்படுத்தப்பட்டனர். டிஜிபி அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்டது. மேலும், மிரட்டல் விடுத்த நபர் பேசிய தொடர்பு எண்ணை வைத்து, அந்த நபரை காவல் துறையினர்   கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.  

செய்திகள்
ஞாயிறு செப்டம்பர் 23, 2018

ஸ்டெர்லைட் ஆலை குறித்து ஆய்வு செய்த பின் செய்தியாளர்களை சந்தித்த ஆய்வுக்குழு தலைவர் தருண் அகர்வாலா, அதிக மக்கள் ஆலைக்கு எதிராக இருப்பதாக தெரிவித்துள்ளார்.