செப் 10 - இந்தித் திணிப்பை தடுக்கவும் தமிழ் மொழியை ஆட்சி மொழியாக்கவும் மாபெரும் ட்விட்டர் பரப்புரை !

புதன் செப்டம்பர் 09, 2015

வரும் செப்டம்பர் 10-12 நாட்களில் இந்தி அரசு இந்தி அல்லாத மக்களின் வரிப்பணத்தில் உலக இந்தி மாநாட்டை நடத்துகிறது. இம்மாநாட்டை நடத்தும் நோக்கம் பின்பவருமாறு.

 

1. இந்தியை இந்தி பேசாத பிற மாநிலங்களில் தீவிரமாக திணிப்பது.
2. இந்தியை இந்திய அரசின் அனைத்து செயல்பாடுகளிலும் பயன்படுத்துவது.
3. இந்திய வெளியுறவுத் துறை இந்தியை மட்டும் அலுவல் மொழியாக பயன்படுத்துவது.
4. அறிவியல், பொருளாதாரம், மனிதவள மேம்பாடு என அனைத்து துறைகளிலும் இந்தியை கட்டாயமாக பயன்படுத்துவது.
5. இந்தியை இந்தியாவில் உள்ள அனைவரும் கட்டாயமாக எழுதப் படிக்க வேண்டும் என்ற தீர்மானத்தை கொண்டு வருவது.
6. இந்தியை ஐ.நா.வின் அலுவல் மொழியாக அறிவிப்பது
7. எல்லா மொழிகளையும் புறக்கணித்து விட்டு இந்திக்கு மட்டுமே அதிகமான நிதியை ஒதுக்குவது.
8. அனைத்து பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இந்திக்கு தனி இடத்தை, தகுதியை உருவாக்குவது.
9. இந்தியை இந்தியாவின் ஒற்றை ஆட்சி மொழி, தேசிய மொழியாக அறிவிப்பது.
10. இந்தி தெரியாதவர்கள் இந்தியர்களே அல்லவென்றும், இந்தி தான் இந்தியாவின் கலாச்சார மொழி என அடையாளப்படுத்துவது.

 

போன்ற பல செயல்திட்டங்களை முன்வைத்து இந்திய அரசு உலக இந்தி மாநாட்டை நடத்துகிறது. இப்படியான தீய எண்ணத்தை முன்னிறுத்தியும் இந்தியாவில் உள்ள இந்தி அல்லாத பிற மொழிகள் மற்றும் பண்பாடுகளையும் அழிக்கவும் நம்முடைய வரிப்பணத்தை இந்தி அரசு வாரி வாரி செலவு செய்கிறது.

 

இப்படியான அநீதியான மாநாட்டை எதிர்ப்பது இந்தியாவில் உள்ள அனைத்து மக்களின் கடமையாகும். ஆகவே வரும் செப்டம்பர் 10 ஆம் நாளில் காலை 9 மணி முதல் #StopHindiImperialism என்ற குறியீட்டை பயன்படுத்தி ட்விட்டர் இணையதளத்தில் மாபெறும் இந்தித் திணிப்புக்கு எதிரான பரப்புரையை நாம் தொடங்க உள்ளோம். மொழி உணர்வாளர்கள் அனைவரும் இதற்கு ஆதரவு நல்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

இராச்குமார் பழனிசாமி
 மொழியுரிமை முன்னெடுப்பு தமிழ்நாடு
 PLE Tamil Nadu
9566224027