செயலணியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துக!

January 11, 2017

பொறுப்புக் கூறலுக்கான உள்நாட்டுப் பொறிமுறையில் சர்வதேச நீதிபதிகளை உள்ளடக்குவது உள்ளிட்ட நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான கலந்தாய்வு செயலணியின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துமாறு மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

உண்மை மற்றும் நீதி தொடர்பாக சிறீலங்கா மக்களிடம் பரந்துபட்ட ரீதியில் நடாத்தப்பட்ட முதலாவது ஆய்வில், மக்களின் அபிலாசைகள் வெளிப்படுத்தப்பட்டுள்ளனவென்றும் அதனை சிறீலங்கா அரசாங்கம் நடைமுறைப்படுத்தவேண்டுமெனவும் நியுயோர்க்கைத் தளமாகக் கொண்டியங்கும் அனைத்துலகக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்தக் கலந்தாய்வுச் செயலணியின் கருத்தெதனையும் சிறீலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென சில அமைச்சர்கள் கருத்து வெளியிட்டிருந்தனர். அவர்களின் கருத்துத் தொடர்பாகவும் அனைத்துலகக் கண்காணிப்பகம் தனது அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

மேலும், ‘இடைக்கால நீதி தொடர்பாக, பரந்துபட்ட கலந்தாய்வுகளை நடத்திய செயலணியின் பரிந்துரைகள் மீது உறுதியான நடவடிக்கையை சிறீலங்கா அரசாங்கம் எடுக்க வேண்டும். கலந்தாய்வுச் செயலணியின் பரிந்துரைகளை சிறீலங்கா அரசாங்கம் கிடப்பில் போடக்கூடாது.

ஜெனீவாவில் உள்ள அரசாங்கங்களுக்கு மட்டுமன்றி, போருக்குப் பின்னர் நீதியையும் நல்லிணக்கத்தையும் எதிர்பார்க்கின்ற தமது சொந்த மக்களுக்காக சிறீலங்கா அரசாங்கம் இதனைச் செய்யவேண்டுமெனவும் மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியப் பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

செய்திகள்
ஞாயிறு April 30, 2017

வடக்கு கிழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரதிநிதிகள் இன்று (30) காலை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.  

ஞாயிறு April 30, 2017

சிவராமின் கொலை சம்பந்தமாக இன்னும் உண்மைகள் கண்டறியப்படவில்லை, குறித்த கொலை சம்பவத்தின் உண்மைகள் அறியப்பட வேண்டியது அவசியம் என  தான்  நினைப்பதாக இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.