சேர்ஜி தமிழ்ச்சோலையில் தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு!

Sunday September 16, 2018

சேர்ஜி தமிழ்ச்சோலையில் நேற்று தியாக தீபம் திலீபனின்  31ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது.  

நிகழ்வில் அக வணக்கம் செலுத்தப்பட்டு திலீபனின்  திருவுருவப் படத்திற்கு ஈகச்சுடர் ஏற்றப்பட்டது. ஈகச்சுடரினை 1998ஆம் ஆண்டு கிளிநொச்சி சமரில் வீரச்சாவை அடைந்த வீரவேங்கை வேணியின் சகோதரி லக்ச்மணன் ராதிகா ஏற்றிவைத்தார்.

தொடர்ந்து மாணவர்கள் பெற்றோர்களால் சுடர் ஏற்றி மலர் வணக்கம் செலுத்தப்பட்டது. அதில் திலீபனின் விவரணப்படம் காண்பிக்கப்பட்டது, அதில் பிரான்ஸ் இளையோர் அமைப்பு கலந்து கொண்டு எமது போராட்ட சம்மந்தமான விளக்க உரையாடல் பிரேஞ் தமிழ் மொழியில் நடத்தினார்கள். இறுதியாக தமிழரின் தாகம் தமிழீழ தாயகம் என்ற உறுதி மொழியுடன் நிறைவுபெற்றது.