சேலம் கொளத்தூர் புலியூர் பிரிவில் மாவீரர் நாள்!

புதன் நவம்பர் 28, 2018

27.11.18 அன்று மாலை 6.05 மணிக்கு சேலம் கொளத்தூர் புலியூர் பிரிவில் அமைந்துள்ள தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் திரு. ரத்தினசாமி தலைமையில் திரு. தமிழ் ராஜேந்திரன், துரைசாமி, மேவி.குமார் முன்னிலையில் மாவீரர் நாள் சிறப்புடன் நடைபெற்றது. 

திரு.வி.சேகர் (திரைப்பட இயக்குனர்) தலைவர், உலக திருக்குறள் கூட்டமைப்பு மற்றும் கொளத்தூர் தா.செ.மணி தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். ஆகியோர் மாவீரர் நாள் உரையாற்றினார். 

ஏராளமான பொதுமக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு மறைந்த மாவீரர்களுக்கும் தமிழ் பொதுமக்களுக்கும்  வீரவணக்கம் செலுத்தினர்.  இந்நிகழ்வை தமிழீழ விடுதலை ஆதரவு ஒருங்கிணைப்பு குழு ஏற்பாடு செய்திருந்தது.