சேவலிலிருந்து யானைக்குத் தாவிய பெண்!

Friday January 12, 2018

எதிர்வரும் உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், யட்டியந்தோட்டை பிரதேச சபைக்கு சேவல் சின்னத்தில் போட்டியிடும்  பழனியாண்டி கயானி என்ற பெண் வேட்பாளர், தனது ஆதரவாளர்களுடன் ஐக்கிய தேசியக் கட்சியில்  இணைந்துக் கொண்டுள்ளார்

ஐக்கிய தேசியக் கட்சியின் பிரசாரக் கூட்டம், யட்டியந்தோட்டை பனாவத்தை தோட்டத்தில், நேற்று(11) நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஷ்ணன், கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சே பெரேரா, மலையக மக்கள் முன்னணியின் கேகாலை மாவட்ட அமைப்பாளர் ஜி.ஜெகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போதே மேற்படி பெண் வேட்பாளர், தனது ஆதரவாளர்களுடன் ஐ.தே.கவில் இணைந்துகொண்டார்.