சே குவேராவின் 50-ம் ஆண்டு நினைவு தினம்!

ஒக்டோபர் 09, 2017

பிரபல சோசலிசப் புரட்சியாளரான சே குவேரா கொல்லப்பட்ட 50-வது ஆண்டு நினைவு தினம் கியூபாவில் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

சே குவேரா அல்லது எல் சே என பொதுவாக அறியப்பட்ட எர்னெஸ்டோ குவேரா டி லா செர்னா அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.

இவர் புரட்சிகளில் ஈடுபட்டதற்காக பொலியாவில் 1967-ம் ஆண்டு அக்டோபர் 8-ம் தேதி அரச படையினரால் கைது செய்யப்பட்டார். அடுத்த நாளே (9-ம் திகதி) அவரை பொலிவிய படையினர் கொலை செய்தனர். அவரது உடல் முதலில் பொலிவியாவின் வேலேகிரான்ட் அருகே கனடா தே அர்ரோயாவில் புதைக்கப்பட்டது. பின்னர் 1997-ம் ஆண்டு, அவரது உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டு கியூபாவின் ஹவானா புரட்சி சதுக்கத்தில் விழா நடத்தப்பட்டு பின்னர் சாண்ட்டா கிளாராவில் புதைக்கப்பட்டது.

இந்நிலையில், சே குவேரா பிடிபட்டு கொல்லப்பட்ட 50-வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் நேற்று (8-ம் திகதி) கியூபாவில் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. சே குவெராவின் உடல் அடக்கம் செய்யப்பட்டு, சிலை வைக்கப்பட்டிருக்கும் சாண்ட்டா கிளாராவில் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.

தொலைக்காட்சி மூலம் ஒளிபரப்பப்பட்ட இந்த நிகழ்வில் கியூபா அதிபர் ராவுல் காஸ்ட்ரோ மற்றும் பல பள்ளிக் குழந்தைகள் கலந்து கொண்டனர். அவரது கல்லறையில் ஒரு வெள்ளை ரோஜாவை ரவுல் காஸ்ட்ரோ வைத்து அஞ்சலி செலுத்தினார். அங்கு கூடிய அனைத்து பொதுமக்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.

செய்திகள்
ஞாயிறு ஒக்டோபர் 22, 2017

குர்திஸ்தானின் கேர்க்குக், ரஸ் குர்மாற்றூ ஆகிய நகரங்களில் ஈராக்கிய-ஈரானிய படைகளால் 550 தொடக்கம் 600 வரையான குர்தி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

சனி ஒக்டோபர் 21, 2017

குர்திஸ்தானில் கடந்த ஆறு நாட்களாக ஈரானிய-ஈராக்கிய படைகள் முன்னெடுத்து வரும் படை நடவடிக்கைகளில் 168,372 குர்தி மக்கள் இடம்பெயர்ந்திருப்பதாக குர்திஸ்தான் மாநில அரசாங்கம் அறிவித்துள்ளது.

சனி ஒக்டோபர் 21, 2017

மர்ம நபரால் கடத்தப்பட்ட பாகிஸ்தான் பெண் பத்திரிக்கையாளர் இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர்  

சனி ஒக்டோபர் 21, 2017

குர்திஸ்தான் தலைநகர் எர்பில் நோக்கி ஈரானிய துணைப்படைகளின் உதவியுடன், கவச ஊர்திகள் சகிதம் வெள்ளிக்கிழமை ஈராக்கிய படைகள் முன்னெடுத்த வலிந்த படையெடுப்பு முறியடிக்கப்பட்டிருப்பதாக குர்திஸ்தான் மாநில பா

வெள்ளி ஒக்டோபர் 20, 2017

வடகொரியாவுக்குப் போர் மிரட்டல் விடுப்பது அமெரிக்காவுக்குத் தான் பேராபத்து என்று ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார்.வடகொரியா அமெரிக்காவை குறிவைத்து அவ்வப்போது அணு ஆயுதம் மற்றும் ஏவுகணைச் சோதனையைநடத்த

வெள்ளி ஒக்டோபர் 20, 2017

நியூசிலாந்தின் புதிய பிரதமராக தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஜெசிந்தா அர்டென் பதவியேற்க உள்ளார். மிகக்குறைந்த வயது பெண் பிரதமர் என்ற பெருமையைப் பெறும் ஜெசிந்தாவுக்கு வயது 37.