சைக்கிள் ஓடி சாதனை படைத்த 105 வயது முதியவர்

January 05, 2017

1 மணிநேரத்தில் 22½ கி.மீட்டர் தூரத்தை சைக்கிளில் கடந்து 105 வயது முதியவர் சாதனை படைத்துள்ளார். ‘ சாதனைக்கு வயது தடை இல்லை’ என்பார்கள். அதை நிரூபிக்கும் வகையில் 105 வயது முதியவர் ஒருவர் 1 மணி நேரத்தில் 22.5 கி.மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்துள்ளார். 

அவரது பெயர் ராபர்ட் மார்சண்ட். இவர் பிரான்சை சேர்ந்தவர். இவர் பாரீஸ் அருகே ஒரு விளையாட்டு மைதான ஓடு தளத்தில் சைக்கிள் ஓட்டினார். 1 மணி நேரத்தில் இவர் 22.5 கி.மீட்டர் தூரம் ஓட்டி சாதனை படைத்தார். அப்போது அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கானோர் கைதட்டி மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர்.

இவர் தனது 102 வயது வயதில் 26.9. கி.மீட்டர் தூரம் வரை சைக்கிள் ஓட்டியுள்ளார். 1911-ம் ஆண்டில் பிறந்த இவர் தனது 14 வயதில் மோட்டார் சைக்கிள் ஓட்ட பழகினார்.

தனது 67 வது வயதில் சைக்கிள் ஓட்டுவதில் ஆர்வம் காட்டினார். 2012-ம் ஆண்டில் அதாவது தனது 100-வது வயதில் 4 மணி 17 நிமிடம் 27 வினாடிகளில் 100 கி.மீட்டர் தூரம் சைக்கிள் ஓட்டி சாதனை படைத்தார். அதற்காக 6 மாதம் பயிற்சி மேற்கொண்டார். 

செய்திகள்
ஞாயிறு April 30, 2017

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஊடகங்களை கடுமையாக விமர்சித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியோற்று 100வது நாள் பூர்த்தி விழா நேற்று பென்சன்வேனியாவில் இடம்பெற்றது.

சனி April 29, 2017

வடகொரியா மற்றுமொரு ஏவுகணை சோதனையை நடத்தியுள்ளதாக அமெரிக்க மற்றும் தென்கொரிய இராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

சர்வதேச ஊடகமொன்று இதனைத் தெரிவித்துள்ளது.

புதன் April 26, 2017

வட கொரியா முன்னெடுத்த ஏவுகணை பரிசோதனைகள் மற்றும் அண்மையில் அந்நாடு எழுப்பிய கருத்துக்களால் முறுகல் நிலை தோன்றியுள்ள நிலையில், அமெரிக்காவின் முன்னணி நீர்முழ்கி மற்றும் போர்க்கப்பல்கள் போர் ஒத்திகைக்