சைட்டத்திற்கு எதிரான மருத்துவ சபையின் மேன்முறையீட்டை விசாரித்த நீதிபதி விலகல்

நவம்பர் 14, 2017

மாலபே சைட்டம் தனியார் பல்கலைக்கழகத்தின் பட்டதாரிகளை பதிவு செய்து கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இலங்கை மருத்துவ சபை முன்வைத்த மேன்முறையீட்டை விசாரித்த மூவர் கொண்ட நீதிபதிகள் குழாமிலிருந்து விலகுவதாக நீதிபதி பிரியந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதியினால் குறித்த பிரச்சினை தொடர்பாக நியமிக்கப்பட்ட புதிய குழு எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி அளவில் தமது பரிந்துரைகளை செயற்படுத்த நடவடிக்கை எடுக்கவுள்ளது. 

அதனையடுத்து குறித்த பிரேரணையை ஜனவரி மாதம் வரை ஒத்தி வைக்குமாறு சட்டமா அதிபர் சார்பாக இன்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. சைட்டம் நிறுவனம் சார்பாக முன்னிலையான சட்டத்தரணி அந்த கோரிக்கைக்கு எதிர்ப்பை வெளியிட்டதாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

செய்திகள்
ஞாயிறு June 24, 2018

இன்ஸ்டாகிராம் செயலியை தொடர்ந்து ஃபேஸ்புக் சேவையில் பயனர் செலவிடும் நேரத்தை தெரிந்து கொள்ளும் வசதி சோதனை செய்யப்படுகிறது.

ஞாயிறு June 24, 2018

தமிழரசுக்கட்சியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களாக சாந்தி சிறீஸ்கந்தராசா மற்றும் துரைரட்ணசிங்கம்