சோகத்தில் பிரெஞ்சு தேசம் - அஞ்சலியும் சகோதரத்துவமும்!

சனி நவம்பர் 14, 2015

பரிசில் பயங்கரவாதத் தாக்குதலில் கொல்லபட்ட மக்களிற்கான அஞ்சலிகளைச் செலுத்தும் வகையில், டுவிட்டரில், பல ஆதரவுப் பட்டயங்கள் போடப்பட்டு வருகின்றன.  "JeSuisParis" எனப்படும் ஆதரவுச் சுட்டிகளும் பெருகி வருகின்றன.

இதே நேரம் சர்வதேச நினைவுச் சின்னங்களிலும், பிரம்மாண்டக் கட்டங்களிலும், உலகெங்கும் பிரெஞ்சுக் கொடியின் நிறம் போடப்பட்டு, மக்களிற்கான அஞ்சலிகள் செலுத்தப்பட்டுள்ளன. பிரபல விளையாட்டரங்குகளும் தம் பங்கிற்கு அஞ்சலிகளைச் செலுத்தி உள்ளன.