சோனம் கபூர் திருமணம்!

செவ்வாய் மே 08, 2018

பாலிவுட் நடிகையும் நடிகர் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூர் தனது காதலரை இன்று (செவ்வாய்க்கிழமை) மணந்தார். மும்பை பாந்த்ராவில் சோனம் கபூரின் அத்தையின் வீட்டில் நெருங்கிய சொந்தபந்தங்கள் மற்றும் உறவினர்கள் பங்கேற்க திருமணம் சிறப்பாக நடைபெற்றது.நடிகர்கள் ஆமீர் கான், கரீனா கபூர், ராணி முகர்ஜி, இயக்குநர் கரண் ஜோஹர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பாலிவுட் உலகில் சோனம் கபூரின் ஃபேஷனுக்கு பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த அளவுக்கு நவீன நாகரிக உடைகளை அணிந்து கவனத்தை ஈர்ப்பதில் சோனம் கபூருக்கு நிகர் அவரே.

இன்று, தனது திருமண நாளில் அடர் சிவப்பில் லெஹெங்கா அணிந்திருந்தார் சோனம். நிறைய நகைகள், கை நிறைய பாரம்பரிய வளையல்கள், அழகு சேர்க்க மெகந்தி என நேர்த்தியாக தன்னை தயார் செய்திருந்தார்.

சோனம் கபூரின் சகோதரி ரியா கபூர் இன்ஸ்டாகிராமில் சோனம் கபூர் - ஆனந்த் அஹூஜாவின் திருமண புகைப்படத்தை பகிர அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஆனந்த அஹூஜா டெல்லியைச் சேர்ந்த தொழிலதிபர் ஆவார்.