ஜனநாயகக் கட்சி மாநாட்டில் 18 வயது தமிழ்பெண்

சனி ஜூலை 30, 2016

பிலடெல்பியாவில் நடந்த ஜனநாயக கட்சி மாநாட்டில் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் சட்டம் படிக்கும் 18 வயது தமிழ் பெண் ஸ்ருதி பழனியப்பன் பங்கேற்றார். அமெரிக்க வாழ் இந்தியரான பழனியப்பன் தமிழ்நாட்டை சேர்ந்தவர்.  அவரது மகள் ஸ்ருதிக்கு அதிபர் வேட்பாளர் ஹிலாரியை சீடர் ரியாபிட்ஸ் நகரின் சார்பில் பரிந்துரைக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. 

இந்த மாநாட்டில் கட்சியின் சான்றுக்குழு உறுப்பினராக உள்ள பழனியப்பனும் கலந்து கொண்டார். மாநாட்டில் இளம் வயது உறுப்பினராக ஸ்ருதியும், வயது மூத்தவராக அரிசோனாவை சேர்ந்த 102 வயது ஜெர்ரி ஜென்னட்டும் கலந்து கொண்டு பேசியது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. ஐயோவா பகுதி வாக்காளர்களிடம் கட்சி சார்பில் ஓட்டு சேகரிக்கும் முக்கியமான பிரதிநிதித்துவம் ஸ்ருதிக்கு வழங்கப்பட்டுள்ளது.