ஜனவரி 26-ல் சூர்யாவின் 'எஸ் 3'

January 05, 2017

சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் 'எஸ் 3' திரைப்படம் தணிக்கையில் 'யு' சான்றிதழைப் பெற்றுள்ளது.'சிங்கம்', 'சிங்கம் 2' படங்களைத் தொடர்ந்து சூர்யா-ஹரி கூட்டணியில் உருவாகியிருக்கும் படம் 'எஸ் 3'. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து அனுஷ்கா, சுருதிஹாசன், கிரிஷ், சூரி, ராதிகா சரத்குமார், நாசர், ராதாரவி உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்திருக்கும் இப்படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.ஈ.ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். இந்நிலையில் எஸ் 3 படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் இப்படத்துக்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளனர். 

முன்னதாக தணிக்கையில் இப்படம் 'யு/ஏ' சான்றிதழ் பெற்றது. இதனால் படத்தின் சில காட்சிகளை நீக்கிய படக்குழு மீண்டும் தணிக்கைக்கு இப்படத்தை அனுப்பி வைத்தது. படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள் தற்போது  இப்படத்துக்கு 'யு' சான்றிதழை வழங்கியுள்ளனர். 

'எஸ் 3' படத்தின் மொத்த ரன்னிங் டைம் 2 மணி நேரம் 35 நிமிடங்கள். ஜனவரி 26-ம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு உலகம் முழுவதும் இப்படம் வெளியாகிறது.

செய்திகள்
செவ்வாய் March 21, 2017

தமிழகத்தின் முன்னேற்றமே நமது முன்னேற்றம் என்று கூறி உள்ள இயக்குனர் தங்கர்பச்சான் இளைஞர்களுக்காக புதிய இயக்கத்தை தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.