'ஜனாதிபதி வேட்பாளர்" யாரென மஹிந்தவே இறுதி முடிவெடுப்பார்!

செவ்வாய் செப்டம்பர் 25, 2018

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பொது வேட்பாளர் யார்? என்ற இறுதி முடிவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தீர்மானிப்பார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத்தெரிவித்துள்ள அவர்,

ஜனாதிபதி தேர்தலுக்கு 14 மாதங்களே இருக்கின்றன. ஜனாதிபதி வேட்பாளராக மஹிந்த ராஜபக்ஷ யாரை பரிந்துரை செய்கின்றாரோ அவரை நாம் ஏற்றுக்கொள்வோம். கட்சிக்குள் எந்த பிளவும் இல்லை. எனினும் இறுதி வேட்பாளர் யார் என அறிவிக்கும் வரை கட்சியில் உள்ளவர்கள் அவரவருக்கு விருப்பமான வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். எனவே எமது அணியில் உள்ள அங்கத்துவ கட்சி தலைவர்கள் இடையே எவ்வித முரண்பாடுகளும் இல்லை என்றார்.