ஜப்பானின் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை

சனி நவம்பர் 14, 2015

ஜப்பானின் தென்மேற்கு கடற்கரையில்சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியுள்ளது.

இது குறித்து, ஜப்பான் வானிலையியல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மேற்கு கடற்கரையில் உள்ள ககோஷிமா எல்லை மற்றும் சட்சுனான் தீவுகளில் 3 அடி உயரத்திற்கு கடலலை சீற்றத்துடன் காணப்படுவதாகவும், 10 கி.மீ ஆழத்தில் மையமிட்டுள்ள நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.0 ஆக பதிவாகியிருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து கடற்கரையோரப்பகுதிகளில் இருப்பவர்கள் உடனடியாக பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு ஜப்பான் வானிலையியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.