ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த காணொளி!

January 26, 2018

சில மாதங்களுக்கு முன்பு தமிழ் இளைஞர்கள் முமுணுத்த பாடல் தான் ஜிமிக்கி கம்மல். அதற்கு காரணம் ஷெரில் என்ற மலையாள கல்லூரி ஆசிரியை தான்.

மோகன் லால் நடித்த படத்தின் ஒரு பாடல் தான் ஜிமிக்கி கம்மல். ஓணம் என்ற கேரளா பண்டிகையின் போது ஒரு கல்லூரியில் சில பெண்கள் இணைந்து நடனம் ஆடினார்கள். அதில் நடுவில் ஆடிய ஷெரில் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றார். 

இவர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் படத்தில் வரும் சொடக்கு பாடலுக்கு நடனம் ஆடி அந்த காணொளி  நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது மலையாள நடிகை மற்றும் நடிகர் ஒருவருடன் இணைந்து ஒரு காணொளி  யூ டியூப்பில் பதிவு செய்துள்ளார். இந்த காணொளி  அவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.

செய்திகள்
செவ்வாய் May 08, 2018

பாலிவுட் நடிகையும் நடிகர் அனில் கபூரின் மகளுமான சோனம் கபூர் தனது காதலரை இன்று  மணந்தார்.