ஜெயலலிதா கொலை செய்யப்பட்டிருக்கிறார்!

January 08, 2017

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 5-ஆம் தேதி இரவு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் இறந்தார். அவரது மரணத்தில் பலரும் சந்தேகத்தை எழுப்பி வருகின்றனர். இன்று வரை பொதுமக்களுக்கு ஜெயலலிதா மரணம் குறித்து தெளிவான விளக்கம் கிடைக்கவில்லை.

பலரும் ஜெயலலிதாவின் மரணம் குறித்து கேள்வி எழுப்பி வருகின்றனர். அரசியல் கட்சி தலைவர்கள் சிலர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலலிதாவின் நீண்டகால தோழி கீதா என்பவர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
 
இதனையடுத்து தனியார் தமிழ் வார இதழ் ஒன்றுக்கு கீதா பேட்டியளித்துள்ளார். அதில் ஜெயலலிதா நூறு சதவீதம் கொலை செய்யப்பட்டிருக்கிறார். அவரது மரணத்திற்கு காரணம் சசிகலா தரப்பு தான் என கீதா அடித்துப் பேசுகிறார். சசிகலா தரப்பு ஜெயலலிதாவுக்கு தெரியாமல் பல விஷயங்கள் செய்திருக்கிறார் எனவும் அதனால் ஜெயலலிதா தண்டனை அனுபவித்ததாகவும் கூறியுள்ளார்.

சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் பற்றி ஜெயலலிதாவின் தோழி கீதா பல பரபரப்பு தகவல்களை இந்த பேட்டியில் கூறியுள்ளார். அனல் பறக்கும் இந்த பேட்டி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

செய்திகள்
திங்கள் May 29, 2017

தோழர் திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்: பா.ச.க.வின் ஆணைப்படி அடக்குமுறை!  தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!