ஜெரமி கோர்பினை பிரித்தானியப் பிரதமராக்குவோம் - தமிழர்களுக்கு சென் கந்தையா அழைப்பு!

June 06, 2017

தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமைக்காகவும், தமிழின அழிப்பிற்கு நீதிவேண்டியும் கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாகக் குரல் கொடுத்து வரும் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் அவர்களைப் பிரித்தானியப் பிரதமராக்குவதற்கு தமது வாக்குப் பலத்தைப் பிரித்தானியாவாழ் தமிழீழ மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் தலைவர் சென் கந்தையா அவர்கள் அறைகூவல் விடுத்துள்ளார்.

பிரித்தானியாவின் அரசியல் வரலாற்றில் பெரும் திருப்புமுனையாக அமையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படும் நாடாளுமன்றப் பொதுத்தேர்தல் வரும் 08.06.2017 வியாழக்கிழமையன்று நடைபெறுகின்றது.

கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாகத் தமிழ் மக்களுக்காகக் குரலெழுப்பி வரும் ஜெரமி கோர்பின் அவர்கள் இம்முறை நடைபெறும் தேர்தலில் தொழிற்கட்சியின் பிரதமர் வேட்பாளராகக் களமிறங்குகின்றார்.

தன்னாட்சியுரிமையின் அடிப்படையில் தமிழீழ மக்களின் அரசியல் தலைவிதியைத் தீர்மானிப்பதற்கான பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஆதரவான நிலைப்பாட்டை ஜெரமி கோர்பின் அவர்களும், அவரது தலைமையிலான தொழிற்கட்சியின் மூத்த தலைவர்களும் எடுத்திருப்பதோடு, தாம் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் தமிழின அழிப்பிற்குக் காரணமாக இருந்த சிறீலங்காவின் முந்நாள் மற்றும் இந்நாள் ஆட்சியாளர்களை பொறுப்புக்கூற வைப்பதற்கான இராசரீக நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் உறுதியளித்துள்ளனர்.

இந்நிலையில் இது குறித்து பிரித்தானியாவாழ் தமிழீழ மக்களுக்கான செய்திக் குறிப்பொன்றை விடுத்திருக்கும் தொழிற்கட்சிக்கு ஆதரவான தமிழர்கள் அமைப்பின் தலைவர் சென் கந்தையா, வியாழக்கிழமை நடைபெறும் தேர்தலில் தவறாது வாக்களித்து தொழிற்கட்சியின் அனைத்து வேட்பாளர்களையும் வெற்றியீட்ட வைப்பதும், அதன் மூலம் தொழிற்கட்சித் தலைவர் ஜெரமி கோர்பின் அவர்களைப் பிரித்தானியாவின் பிரதமர் பதவியில் அமர்த்துவதும் பிரித்தானியாவாழ் தமிழீழ மக்கள் அனைவரினதும் வரலாற்றுக் கடமை என்று குறிப்பிட்டுள்ளார்.

இதுவே தமிழீழ மக்களுக்கு ஆதரவான வெளியுறவுக் கொள்கையைப் பிரித்தானியா எடுப்பதற்கு ஏதுவான அரசியல் புறச்சூழலுக்கு வழிகோலும் என்றும் சென் கந்தையா அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்.

 

செய்திகள்
ஞாயிறு ஒக்டோபர் 15, 2017

தமிழீழப்பெண்கள் எழுச்சி நாள் ஒக்டோபர் 10ஐ முன்னிட்டு டென்மார்க் மகளிர் அமைப்பினரால் விடுக்கப்படும் அறிக்கை

வியாழன் ஒக்டோபர் 05, 2017

பிரான்ஸில் திணைக்கள மட்டத்திலான திருக்குறள் திறன் போட்டி நடைபெற்றது. கடந்த 1 ஆம் திகதி பிரான்ஸ் தமிழ்ச்சோலை தலைமை பணியகத்தின் ஏற்பாட்டில் நந்தியார் பகுதியில் இடம்பெற்றது.