ஜே.ஆர் ரின் அதிகாரத்திற்கு எதிராக நாம் போராடினோம்

December 28, 2016

அமைச்சர் ராஜித்த சேனாரத்ன, விசேட அபிவிருத்தி ஏற்பாடுகள் சட்டமூலம் தொடர்பில் கருத்து தெரிவித்தார். இது தொடர்பாக பின்வருமாறு….

கேள்வி – 2017 ஆம் ஆண்டு ரெடிகல் மாற்றம் ஒன்றை உங்களது அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. கடந்த அரசாங்க காலத்தில் நீங்கள் சிறப்பு அமைச்சர் ஒருவர் தொடர்பில் பேசினீர்கள். அது சட்டபூர்வமற்ற முறையில் காணப்பட்டது. எனினும் இன்று சிறப்பு அமைச்சரை உருவாக்குவதற்கான சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுகிறது. ஆகக்குறைந்தது அந்த அமைச்சருக்கு எதிராக நீதிமன்றம் செல்லவும் முடியாது. அமைச்சரே இங்கு என்ன நடைபெறுகிறது.?

பதில் – அவ்வாறான சிறப்பு அமைச்சரகளை உருவாக்குவதற்காக நல்லாட்சி அமைக்கப்படவில்லை. சிறப்பு அமைச்சரவையை உருவாக்கும் எந்தவொரு சட்டமூலத்திற்கும் நாம் ஆதரவு வழங்குவதில்லை. நல்லாட்சி என்று வேறு நிர்வாகம் ஒன்றை கொண்டு செல்ல இந்த நாட்டில் இடமளிப்பதில்லை.

கேள்வி – இந்த சட்டமூலத்தை முன்வைப்பதன் தேவை என்ன? யாருடைய தேவைக்காக இது இடம்பெறுகிறது?

பதில் – இந்த நாட்டிற்கு அபிவிருத்தி சட்டம் ஒன்று தேவை. துரித செயற்பாடுகளை முன்னெடுத்தாலே அதிகளவிலான முதலீட்டாளர்கள் எமது நாட்டிற்கு வருகைத் தருவார்கள்.

கேள்வி – அபிவிருத்தி என்ற பெயரில் ஜனாதியிடம் இருந்து குறைக்கப்பட்ட அதிகாரங்களை வேறு அமைச்சர் ஒருவருக்கு வழங்க முடியுமா?

பதில் – அன்றிலிருந்து நாம் போராடியிருக்கிறோம். ஜே.ஆர் ஜெயவர்தனாவின் அதிகாரத்திற்கு எதிராக நாம் போராடினோம். எனினும் மைத்திரிபால சிறிசேன தனது அதிகாரத்தை தானே குறைத்துக் கொண்டார். அந்த அதிகாரத்தை வேறு எவருக்கும் கொடுக்க முடியாது.

கேள்வி – அமைச்சரே இங்கு குறிப்பிடப்படுவதைப் போன்று சிறப்பு அமைச்சருக்கு மாத்திரம் அல்லது இதன் மூலம் உருவாக்கப்படும் நிறுவனத்தின் ஊழியர்களுக்கு எதிராகவும் வழக்குத் தாக்கல் செய்ய முடியாது என்று இங்கு கூறப்படுகிறது.....?

பதில் – இந்த சட்டத்தை உருவாக்கிய சட்டத்தரணி சட்டத்தை எந்தளவு அறிந்துள்ளார் என்பது எனக்குத் தெரியாது. அவர் சட்டத்தை அறிந்தாலும் இந்த நாடு தொடர்பிலோ அல்லது நாட்டின் அரசாங்கம் தொடர்பில் தெரியாத ஒரு முட்டாள். அதனையே என்னால் கூற முடியும்.

 

செய்திகள்
திங்கள் August 14, 2017

2006ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 14ஆம் திகதி தமிழரின் வரலாற்றில் ஒரு துயர் படிந்த நாளாகி இன்றோடு பதினொரு வருடங்கள் கடக்கின்றன ,தமிழர்களின் நெஞ்சு கனக்கும் துயரில் பெரிய துயர் இதுவென்றும் சொல்லலாம் உலகத்த

புதன் August 09, 2017

பயங்கரவாத அமைப்புக்களின் பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப் புலிகளை நீக்குமாறு கடந்த 26.07.2017 அன்று ஐரோப்பிய ஒன்றியப் பேரவைக்கு (Council of the European Union) அதன் அதியுயர்நிலை நீதிமன்றமாகிய ஐர