ஜோதிகாவின் படத்தில் ‘ஜிமிக்கி கம்மல்!

வெள்ளி ஓகஸ்ட் 03, 2018

நடிகை ஜோதிகா – நடிகர் விதார்த் ஆகியோரின் நடிப்பில் உருவாகிவரும் ‘காற்றின் மொழி’ படத்தில் ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் இடம்பெறுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த படத்தை ராதா மோகன் இயக்கி வருகின்றார். இதில் விதார்த், லட்சுமி மஞ்சு ஆகிய முன்னணி நட்சத்திரங்களோடு நடிகர் சிம்பு கௌரவ வேடத்தில் நடித்துள்ளார். ஏ.எச்.காஷிஃப்  இப்படத்துக்கு இசையமைத்துள்ளதாக  படக்குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

இப்படத்தை நடிகை ஜோதிகா மற்றும் படக்குழுவினர் மிகவும் வேகமாகவும் சிறப்பாகவும் நடித்து கொடுத்துள்ளதாகவும் கூறப்படுகின்றது. மலையாள பாடலான ‘ஜிமிக்கி கம்மல்’, கடந்த வருடம் வெளியாகி அனைத்து ரசிகர்களையும் மிகவும் வெகுவாக கவர்ந்ததோடு மாபெறும் வெற்றியை பெற்றதென்பதும் குறிப்பிடத்தக்கது.