ஜோதிகா படத்திற்கு போட்டி வைத்த ராதா மோகன்!

Tuesday April 17, 2018

மொழி படத்திற்குப் பிறகு மீண்டும் ஜோதிகாவை வைத்து படம் இயக்கும் ராதா மோகன், படத்தலைப்பிற்கு ஒரு போட்டி வைத்திருக்கிறார்.

நாச்சியார் படத்திற்குப் பிறகு ராதா மோகன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் ஜோதிகா. மேலும் நடிகர் விதார்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்க இருக்கிறது. துமாரி சுலு என்று இந்தியில் வெற்றிகரமாக ஓடியப் படத்தை தமிழில் இயக்குகிறார் ராதாமோகன். 

இப்படத்தின் தலைப்பு என்னவாக இருக்கும் என்று படக்குழுவினர் புதிர் போட்டுள்ளனர். 

அதற்கான க்ளூ பின்வருமாறு:

1. தலைப்பு இரு வார்த்தைகள் கொண்டது.

2. ஒரு வார்த்தை ராதாமோகன் மற்றும் ஜோதிகாவுடன் தொடர்புடையது.

3. மற்றுமொரு வார்த்தை எஃப்.எம்., ரேடியோவின் பெயர்.

சரியான பதில்களை யூகித்துச் சொல்லும் 10 பேர் தேர்வு செய்யப்பட்டு படப்பிடிப்பு தளத்துக்கு அழைக்கப்படுவார்கள். ஒருநாள் முழுவதும் படப்பிடிப்பு தளத்தில் அவர்கள் இருக்கலாம். மேலும், நடிகர், நடிகை மற்றும் படக்குழுவினருடன் புகைப்படம் எடுத்துக் கொள்ளலாம்.

இந்த போட்டி, வரும் ஏப்ரல் 20-ம் தேதி மாலை 6 மணியுடன் முடிவடைகிறது. அதன் பின்னர் படத்தின் தலைப்பை ஒரு பிரபலம் அறிவிப்பார்.