டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம்!

Saturday November 25, 2017

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம் கட்டப்படும் என அறிவித்த முதல்-அமைச்சருக்கு விளையாட்டு வீரர்கள் சங்கம் பாராட்டு தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு விளையாட்டு வீரர்கள் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் ஐயப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கல்வி, பத்திரிகை, விளையாட்டு, ஆன்மீகம் போன்ற பல்வேறு துறைகளில் சேவை செய்த டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாருக்கு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று அறிவித்த தமிழக முதல்வருக்கு தமிழக விளையாட்டு வீரர்கள் கூட்டமைப்பின் சார்பில் நன்றியையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.