டி.ஐ.ஜி ரூபா அதிரடி மாற்றம்!

யூலை 17, 2017

சசிகலா சலுகை பற்றிய புகார் கூறிய டி.ஐ.ஜி ரூபாவை போக்குவரத்து பிரிவு ஆணையராக மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதற்காக ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த விவகாரம் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் டி.ஐ.ஜி. ரூபா சிறைத் துறையில் இருந்து அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். பெங்களூர் நகர போக்குவரத்து பிரிவு ஆணையராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டது. இது பெங்களூர் சிறை துறை வட்டாரத்தில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

செய்திகள்