டுவிட்டர் அப்டேட்: இனி 280 வார்த்தைகளில் டுவிட்டலாம்!

Wednesday November 08, 2017

டுவிட்டர் மூலம் 140 வார்த்தைகளில் டுவிட் செய்து வந்த வாடிக்கையாளர்கள் இனி 280 வார்த்தைகளில் தங்களது கருத்துக்களை தெரிவிக்க முடியும் என டுவிட்டர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் டுவிட் செய்யும் வார்த்தைகளின் எண்ணிக்கை 280-ஆக உயர்த்தியுள்ளது. புதிய அப்டேட் மூலம் சமூக வலைத்தளத்தின் பயன்பாட்டை அதிகரிக்க முயற்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அந்த வகையில் டுவிட்டர் புதிய அப்டேட் சார்ந்த அதிகார்பூர்வ அறிவிப்பு அந்நிறுவன வலைத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. டுவிட் செய்வதற்கான வார்த்தைகளின் எண்ணிக்கை 280-ஆக அதிகரிக்கப்பட்டதை தொடர்ந்து டுவிட்டர் பயன்பாடு கணிசமாக அதிகரிக்க வாய்ப்புகள் இருப்பதாக குறி்ப்பிடப்பட்டுள்ளது.

டுவிட் வார்த்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் முன்பை விட வாடிக்கையாளர்கள் வேகமாகவும், மிக எளிமையாகவும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொல்ள முடியும் என டுவிட்டர் தளத்தின் அதிகாரப்பூர்வ டுவிட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய மாற்றம் ஜப்பான், கொரியா மற்றும் சீன மொழிகள் தவிர்த்து மற்ற அனைத்து மொழிகளுக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 11 ஆண்டுகளில் டுவிட்டரின் டுவிட் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது குறி்ப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் கடுமையான போட்டி காரணமாக டுவிட்டர் வளர்ச்சியில் பின்தங்கிய நிலையில் உள்ளது. புதிய மாற்றம் டுவிட்டரில் இதுவரை இருந்து வரும் வேகம் குறையாமல் இருக்கும் என டுவிட்டர் நிறுவனத்தின் அலிசா ரோசன் தெரிவித்தார்.  

மேலும், டுவிட்டரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் இன்னமும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் 140 அல்லது அதற்கும் குறைவான வார்த்தைகளிலேயே டுவிட் செய்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.