டெனீஸ்வரன் பதவி நீக்கம் செய்யப்படுவார்!

யூலை 16, 2017

வடமாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் ப.டெனீஸ்வரன்மீது நடவடிக்கை எடுப்பதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ரெலோ கட்சியின் தலைவர் சிறிகாந்தாவுக்கு உறுதியளித்துள்ளார்.

வடக்கு மாகாண போக்குவரத்துத் துறை அமைச்சர் ப.டெனீஸ்வரனை பதவி நீக்கம் செய்யுமாறு தமிழர் விடுதலைக் கழகம் (ரெலோ) கடந்த 13ஆம் நாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு கடிதம் அனுப்பியிருந்தது.

அதில் ரெலோ கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி வடமாகாண அமைச்சில் அங்கம் வகிக்கும் போக்குவரத்துத் துறை அமைச்சர் ப.டெனீஸ்வரனைப் பதவி நீக்கம் செய்வதுடன், அப்பதவிக்கு தங்களால் சிபாரிசு செய்யப்படும் நபரை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அக்கடிதத்திற்கு பதில் கடிதம் எழுதிய வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன்,

உங்­கள் கடி­தம் கிடைத்­தது. அதன் உள்­ள­டக்­கங்­கள் கவ­னத்­தில் எடுக்­கப்­பட்­டன. ஏற்­க­னவே அமைச்­சர் பா.டெனீஸ்­வ­ரன் எமது விசா­ர­ணைக்­குழு முன் தான் தெரி­ப­ட­மாட்­டார் என்று பகி­ரங்­க­மா­கக் கூறி­யதை முன்­வைத்­தும் வேறு கார­ணங்­க­ளுக்­கா­க­வும் அவர் மீது நட­வ­டிக்கை எடுக்­கத் தீர்­மா­னித்­தி­ருந்­தேன். எனவே உங்­கள் பரிந்­து­ரை­க­ளும் கவ­னத்­தில் எடுக்­கப்­பட்டு உரிய நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­ப­டு­வன என்­ப­தைத் தங்­க­ளுக்­குத் தெரி­யப்­ப­டுத்­து­கின்­றேன் எனத் தெரிவித்துள்ளார்.

இணைப்பு: 
செய்திகள்
புதன் யூலை 26, 2017

 தமிழ் நாட்டில் இருந்து நாடு திரும்பும் ஈழ அகதிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டு கணிசமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதன் யூலை 26, 2017

இலங்கை போக்குவரத்துச் சபை மட்டக்களப்பு சாலைக்குச் சொந்தமான பேருந்து, அம்பாறை –கல்முனை வீதியிலுள்ள மல்வத்தை எனுமிடத்தில் குடை சாய்ந்து விபத்துக்குள்ளானதில் 35 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக

புதன் யூலை 26, 2017

கட்டுநாயக்க பண்டரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு எரிபொருள் கொண்டுச்செல்லும் ரயிலை இடைமறித்து கொலன்னாவை பிரதேசத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் 10 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளதையடுத்து அப்பக

புதன் யூலை 26, 2017

வவுனியா - தாலிக்குளம் பகுதியில் சுமார் 30 குடும்பங்களுக்கு இதுவரையில் வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என தெரிவித்து ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.