டென்மார்க் தமிழின அழிப்பிற்கு நீதி கோரி கண்காட்சி - 03

May 18, 2017

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தின் கவனயீர்ப்பு நிகழ்வும் கண்காட்சியும்17.05.17அன்று டென்மார்க் தலைநகர மாநகர நீதிமன்ற முன்றலில் உணர்வுபூர்வமாக இனஅழிப்பு செய்யப்பட்ட மக்களை நினைவு கூர்ந்து ஈகச்சுடரேற்றி அகவணக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. 
 
முள்ளிவாய்க்கால் மண்ணில் குழந்தைகள், பெண்கள்,வயோதிபர்கள் என எந்தவித வேறுபாடும் இன்றி தமிழன் என்ற காரணத்தினால் இரத்த வெறி பிடித்த அரச பயங்கரவாதம் எம் உறவுகளை கொத்துக்கொத்தாய் கொன்று குவித்தது. அந்தக்காட்சிகளையே இன்று கண்காட்சிகளாக வைத்து, பல்லின மக்களுக்கு காட்டி, சர்வதேசத்திடம் எமது மக்களுக்கு நீதி வேண்டி நிற்கிறோம். 
கண்காட்சி நடைபெறும் இடத்தில் வேற்றின மக்களுக்கு துண்டுப்பிரசுரமும்வழங்கி, அவர்களுடன் கலந்துரையாடல்களிலும் செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டனர். 
 
நாளைய தினம் 18.05.17 அன்று தமிழின அழிப்பிற்கு நீதி கோரி மாபெரும் பேரணி டென்மார்க் பாராளமன்ற முன்றலில் மு.ப 12 மணிக்கு  ஆரம்பித்து தலைநகர நகரசபை முன்றலில் நிறைவடையும் . நகரசபை முன்றலில் படுகொலை செய்யப்பட்ட மக்களிற்கான வணக்க நிகழ்வும் நடைபெறும். 
 
எம் இதயச்சுவர்களில் வலிகளால் பதியப்பட்ட அந்த நாட்களை நினைவு கூர்ந்து உறங்கிக்கிடக்கும் மனச்சாட்சிகளை மீண்டுமொரு முறை தட்டிஎழுப்புவோம். எம்உறவுகளுக்காய் நீதி கேட்போம். உறவுகளை இழந்தவரின் உரிமைக்காய் அனைவரும் ஒன்றினைந்து குரல் கொடுப்போம் . வாருங்கள் எம் தாயக உறவுகளே!

இணைப்பு: 
செய்திகள்
வியாழன் May 24, 2018

பிரான்சில் மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்டப் 

புதன் May 23, 2018

யேர்மன் அரசாங்கத்தின் வரலாற்றுப் பொறுப்பு என கூட்டாக வலியுறுத்தப்பட்டது. 

செவ்வாய் May 22, 2018

முள்ளிவாய்க்கால் முற்றம்" இதழ்  7 - சிறுவர்களின் வெளியீடு - தமிழ் பெண்கள் பெண்கள் யேர்மனி

செவ்வாய் May 22, 2018

20.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் மிகச்சிறப

செவ்வாய் May 22, 2018

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத் துறையின் அனுசரணையுடன் பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான வில்நெவ் சென்ஜோர்ஜ் தமிழ்ச் சங்கம் நடாத்திய இல்ல மெய்வல்லுநர்ப் போட்டி 2018 கடந்த ச