டென்மார்க் தமிழீழ தேசிய அணிகள் அடுத்த சுற்றுக்குத் தெரிவு

சனி ஓகஸ்ட் 01, 2015

டென்மார்க்கின் மிகப்பெரிய சுற்றுப்போட்டியான Vildbjerg Cup 2015, 30.07.2015 அன்று Vildbjerg நகரில் ஆரம்பமாகி மிக விறுவிறுப்பாக போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

 

டென்மார்க் தமிழீழ தேசிய அணிகள் மிக சிறப்பாக விளையாடி அடுத்த சுற்றுக்குத் தெரிவாகியுள்ளனர்.

 

15 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் விளையாடிய டென்மார்க் தமிழீழ அணி தமது பிரிவில் உள்ள மூன்று அணியினரையும் வெற்றி கொண்டு, குழுவில் முதலாம் இடத்தை பெற்று கால் இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

 

அதே போல் 17 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் விளையாடிய டென்மார்க் தமிழீழ அணியும் குழுவில் முதலாம் இடத்தை பெற்று 1/8 போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

 

இன்று கால் இறுதி மற்றும் 1/8 போட்டிகள் நடைபெற உள்ளன.