டென்மார்க் தலைநகர நகரசபை முன்றலில் கவனயீர்ப்பு கண்காட்சி!

புதன் மே 16, 2018

தமிழீழத்தில் மே 2009 தமிழின அழிப்பு நாளை முன்னிட்டு டென்மார்கில், டெனிஸ் தமிழ் அமைப்புகளின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இனப்படுகொலைக்கு நீதி கோரி டென்மார்க் தலைநகர நகரசபை முன்றலில் கவனயீர்ப்பு கண்காட்சி 
 இரண்டாம் நாளாக நடைபெற்றது.

இக் கண்காட்சியில் ஈழத்தமிழர்கள் மீது சிங்கள அரசால் 70 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்ற நடைபெறுகின்ற இனப்படுகொலைகளை டெனிஸ் மொழியிலும், ஆங்கிலத்திலும் விளக்கங்கள் கொடுக்கப்பட்டதோடு துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து உரையாடல்களில் செயற்பாட்டாளர்கள் ஈடுபட்டனர்.

இக் கவனயீர்ப்பு கண்காட்சி தொடர்ச்சியாக டென்மார்க் தலைநகரில் நடைபெற்று 18.05.2018 அன்று நடைபெறவுள்ள கவனயீர்ப்பு பேரணியியுடன் நிறைவடையும் என்பது குறிப்பிடத்தக்கது.