டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடம் நடாத்திய மெய்வல்லுநர்ப் போட்டி 2017

June 19, 2017

ஈழந்தமிழர் நுண்கலைகளில் மட்டுமல்லாமல் வீரவிளையாட்டுகளிலும் பெயர் போனவர்களாகத் திகழ்ந்து வந்துள்ளனர் என்பதை நாம் இலக்கியங்களினூடாக அறியலாம். 

தமிழர் மானமுள்ளவர்களாக... வீரமுள்ளவர்களாக... அவற்றுக்காகத் தங்கள் உயிரையும் துறப்பவர்களாக வாழ்ந்த வரலாறுகள் எத்தனையோ உள்ளன. சிலம்பாட்டம் போன்ற தமிழர் மரபுவழிவந்த வீரவிளையாட்டுக்கள் முற்றும் முழுதுமாக அழிந்து விடாமல் இன்றும் பேணப்பட்டு வருகின்றன. தமிழர் தாயகத்திலுள்ள கல்விநிலையங்கள் மரபுவழிவந்த தமிழர் விளையாட்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருவதைக் காணக்கூடியதாய் உள்ளது. 

மனிதன் வாழ்க்கையில் வெற்றி தோல்விகளைச் சமநிலையில் பார்க்க வேண்டும் என்ற மிகப் பெரிய தத்துவத்தை அடிப்படையாகக் கொண்டு விளையாட்டுப் போட்டிகள் நடாத்தப்பட்டு வருகின்றன. உடலையும் உளத்தையும் நலப்படுத்துவதில் விளையாட்டுகள் மிகப் பெரிய பங்களிப்பைச் செய்கின்றன என்பது உளவியற் சார்ந்த ஓர் உண்மையாகும். இதனடிப்படையிலேயே புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் தாம் வாழும் நாடுகளில் தமிழ் சிறார்களுக்காக உருவாக்கிய கல்விநிலையங்களில் மெய்வல்லுநர் போட்டிகளை முக்கிய செயற்பாடாக செயற்படுத்தி வருகின்றனர். 

இவ்வகையில் டென்மார்க் மாலதி தமிழ்க் கலைக்கூடம் ஆண்டுதோறும் மெய்வல்லுநர்ப் போட்டியை நடாத்தி வருகிறது. இவ்வாண்டுக்குரிய மெய்வல்லுநர்ப் போட்டியானது, சனிக்கிழமை 17.06.2017 ஆம் நாளன்று கேர்னிங் நகரில் நடைபெற்றது. இப்போட்டிகளில் Fyn, Jylland மாநில மாலதி தமிழ்க் கலைக்கூடங்களில் இருந்து மாணவர்கள் பங்குபெற்றனர்.

இப்போட்டி டென்மார்க் கொடியேற்றல், தமிழீழத் தேசியக் கொடியேற்றல், அகவணக்கம், மாலதி தமிழ்க் கலைக்கூடப்பாடல், ஒளிச்சுடரேற்றல், மாணவர்களின் அணிவகுப்பு போன்றவற்றுடன் ஆரம்பமாகியது.

மாணவர்கள் ஓட்டம், தடைஓட்டம், பழம்பொறுக்கல், படம்பொருத்துதல், சமநிலைஓட்டம், கயிறடித்தல், குண்டெறிதல், நீளம்பாய்தல் போன்ற விளையாட்டுகளை மிகவும் ஆர்வத்துடன் விளையாடினர். பழைய மாணவர்களும் இவ்வாண்டு போட்டிகளில் பங்குபற்றினர். அத்துடன் பார்வையாளர்களுக்கான விளையாட்டுகளும் இடம்பெற்றன. இவ்விளையாட்டுகளை விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கும் வெற்றிப்பதக்கங்கள் வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற வீரர்களும் வீராங்கனைகளும் வெற்றிகிண்ணங்கள் வழங்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டனர்.

விளையாட்டுப்போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்கள் மற்றும் பங்குபற்றிய அனைத்து மாணவர்களுக்கும், எமது வாழ்த்துக்களையும் பாராட்டுதல்களையும் தெரிவித்துக்கொள்கிறோம். 

இணைப்பு: 
செய்திகள்
வியாழன் May 24, 2018

பிரான்சில் மேஜர் காந்தரூபன் நினைவுசுமந்த உதைபந்தாட்டம் மற்றும் துடுப்பெடுத்தாட்டப் 

புதன் May 23, 2018

யேர்மன் அரசாங்கத்தின் வரலாற்றுப் பொறுப்பு என கூட்டாக வலியுறுத்தப்பட்டது. 

செவ்வாய் May 22, 2018

முள்ளிவாய்க்கால் முற்றம்" இதழ்  7 - சிறுவர்களின் வெளியீடு - தமிழ் பெண்கள் பெண்கள் யேர்மனி

செவ்வாய் May 22, 2018

20.5.2018 ஞாயிற்றுக்கிழமை யேர்மனி நொய்ஸ் நகரத்தில் மாவீரர் வெற்றிக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டிகள் மிகச்சிறப

செவ்வாய் May 22, 2018

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, தமிழர் விளையாட்டுத் துறையின் அனுசரணையுடன் பரிசின் புறநகர்ப் பகுதியில் ஒன்றான வில்நெவ் சென்ஜோர்ஜ் தமிழ்ச் சங்கம் நடாத்திய இல்ல மெய்வல்லுநர்ப் போட்டி 2018 கடந்த ச