டெல்டா மாவட்டங்களுக்கு 84 லட்ச ரூபாய் நிவாரணம்-ஐரோப்பிய யூனியன்.

வியாழன் டிசம்பர் 06, 2018

டெல்டா மாவட்டங்களை புரட்டிப்போட்ட கஜா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவியாக நிவாரண நிதி அளிப்பது குறித்த தகவலை வெளியிட்டுள்ளது ஐரோப்பிய யூனியன்.

அதன்படி கஜா புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்டங்களுக்கு 84 லட்ச ரூபாய் நிவாரணமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இந்த தொகையானது செஞ்சிலுவை சங்கம் மூலம் மக்களுக்கு சேர்க்கப்படும் எனவும், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் இந்த தொகை மூலம் வாங்கப்பட்டு அவர்களுக்கு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.