ட்ரம்ப் சாயலில் பிரமாண்ட சேவல்

January 11, 2017

அமெ­ரிக்க ஜனா­தி­ப­தி­யாக தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ள டொனால்ட் ட்ரம்பின் சாயல் கொண்ட பிர­மாண்ட சேவல் பொம்­மைகள் சீனாவில் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன. இவற்றின் உயரம் 5 மீற்­றர்கள் (16 அடிகள்)  ஆகும்.
 
 ஸேஜியாங் மாநி­லத்தின் ஜியாஸிங் நக­ரி­லுள்ள தொழிற்­சா­லை­யொன்றில் இந்த பொம்­மைகள் தயா­ரிக்­கப்­பட்­டுள்­ளன.  இந்த சேவல்­களின் தலை டொனால்ட் ட்ரம்ப்பின் சிகை­ய­லங்­காரப் பாணியில் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளது. 
 
 அத்­துடன் டொனால்ட் ட்ரம்ப்பின் கையைப் போன்று சேவலின் இறக்­கைகள் வடி­வ­மைக்­கப்­பட்­டுள்­ளன.  எதிர்­வரும் 28 ஆம் திகதி சீன புத்­தாண்டு பிறப்பு ஊர்­வ­லங்­ களில் இந்த பொம்மைகள் காட்சிப்படுத்தப்பட வுள்ளன.


 
 

செய்திகள்