தகவல்களை பெற்றுக் கொள்வதற்கு கட்டணம்?

January 12, 2017

அமைச்சுக்களில் இருந்து தகவல்களைப் பெற்றுக் கொள்ளும் போது பணம் வசூலிக்கப்படுவது குறித்து தகவல் ஆணைக்குழு கலந்துரையாடியுள்ளது.  நேற்று மற்றும் நேற்று முன்தினம் தகவல் ஆணைக்குழு இது தொடர்பில் கலந்துரையாடியதாக அந்தக் குழுவின் உறுப்பினர் ஒருவர் அத தெரணவிடம் கூறினார். 

பெப்ரவரி 03ம் திகதி முதல் தகவலறியும் சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளதுடன், அதற்குறிய விதிமுறைகள் பற்றி இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது. ஏதேனும் தகவல்களை எழுத்து மூலம் பெற்றுக் கொள்வதாயின் அதற்கு கட்டணம் அறவிடுவதற்கு இங்கு யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது. 

எழுத்து மூலம் தகவல்களைப் பெற்றுக் கொள்வதாயின் முதல் மூன்று பக்கங்களுக்கும் கட்டணங்கள் அறவிடுவதில்லை என்றும், 04வது பக்கத்தில் இருந்து 05 ரூபா வீதம் அறவிடுவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இது தொடர்பில் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை என்றும், மீண்டும் அந்தக் குழு கூடி இது தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தகவல்களை காட்சிப்படுத்துவது கட்டாயம் என்பதுடன், பொது மக்களுக்கு வசதியான முறையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட வேண்டும் என்று தகவல் ஆணைக்குழு கூறியுள்ளது. 

செய்திகள்
புதன் ஒக்டோபர் 18, 2017

ஏறாவூர், புன்னக்குடா பகுதியிலுள்ள ஒரு வீட்டில் தாயும் மகனும் இவ்வாறு கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலங்களாரக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

புதன் ஒக்டோபர் 18, 2017

மட்டக்களப்பு, கல்குடா பகுதியில் அமைக்கப்பட்டுக்கொண்டிருக்கும் சர்ச்சைக்குள்ளான மதுபான தொழிற்சாலை வாயிலை மறித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதன் ஒக்டோபர் 18, 2017

நெடுந்தீவில் கடந்த 16 ஆண்டுகளாக கடற்படையினரால் அபகரிக்கப்பட்டுள்ள நூல் நிலையம், மற்றும் 15 க்கும் மேற்பட்ட மக்களின் வீடுகள் போன்றன உடனடியாக விடுவிக்கப்படவேண்டும் என பல தடவைகள் கோரிய போதும் இதுவரை அ

புதன் ஒக்டோபர் 18, 2017

ஒரு நாட்டின் ஜனாதிபதியினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை படைத்தரப்பு நிறைவேற்றவில்லை, புதுக்குடியிருப்பு மண்ணில் மக்கள் ஆட்சி நடைபெறவில்லை, மாறாக படை ஆட்சியே நடைபெறுகின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் சி.