தங்கக் கடத்தல் முறியடிப்பு!

Monday November 20, 2017

சிறிலங்காவில் இருந்து சுமார் 2 கோடி மதிப்பிலான 6 கிலோ மற்றும் 900 கிராம் மதிப்புடைய தங்கத்தை  மண்டபத்தில் வைத்து க்யூ பிரிவு காவல் துறையினர்  கைப்பற்றியுள்ளனர்.

சிறிலங்காவில்  இருந்து ஒருவர் தங்கம் கடத்தி வருவதாக மண்டபம் க்யூ பிரிவுகாவல் துறையினர் கிடைக்கப் பெற்ற ரகசிய தகவலையடுத்து  மண்டபம் வடக்கு கடற்கரைப்பகுதிக்கு சென்ற காவல் துறையினர்  நாட்டு படகில் சந்தேகத்திற்கிடமாக வந்ததை அவதானித்துள்ளனர்.

இதனையடுத்து குறித்த நபரை தடுத்து நிறுத்தி க்யூ  பிரிவு காவல் துறையினர் விசாரணை செய்த போது, குறித்த நபர் கீழக்கரையை சேர்ந்த நசீர் என்றும், அவர் சிறிலங்காவில் இருந்து  நாட்டு படகு மூலம் மண்டபத்திற்கு  தங்கத்தை கடத்தி வந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது.

குறித்த நபரிடமிருந்து  இந்திய மதிப்பில் 2  கோடி ரூபாய் பெறுமதியான சுமார் 6 கிலோ மற்றும் 900 கிராம் தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. குறித்த கடத்தல் சம்பவம் தொடர்பாக மத்திய மாநில, உளவுத்துறை காவல் துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.