தனது பாடல் வரிகளையே படத்தின் தலைப்பாக்கிய தனுஷ்!

May 12, 2018

தனுஷின் முதல் ஹாலிவுட் படமான `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' படத்திற்கு தனுஷின் பிரபல பாடலை வரிகளையே தலைபடபாக்கி உள்ளனர்.

தமிழ் சினிமாவில் முன்னணி நாயகனாக வலம் வரும் நடிகர் தனுஷின் முதல் ஹாலிவுட் படம் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' உலகளவில் பிரபலமான கேன்ஸ் படவிழாவில் திரையிடப்பட உள்ளது. அதற்காக நடிகர் தனுஷ் பிரான்ஸ் சென்றுள்ளார். நேற்று ஃபகிர் படத்தின் தமிழ் போஸ்டரை தனுஷ் வெளியிட்டார். தமிழில் இந்த படத்திற்கு `வாழ்க்கைய தேடி நானும் போனேன்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. 

இந்த தலைப்பு தனுஷின் `வேலையில்லா பட்டதாரி' படத்தில் இடம்பெற்ற பாடலையே படத்தின் தலைப்பாக்கியுள்ளனர்.  ஹாலிவுட் இயக்குநர் கென் ஸ்காட் இயக்கியிருக்கும் இந்த படம் ஐக் வார்ட்ரோபின் `தி எக்ஸ்டார்ட்டினரி ஜார்னி ஆஃப் தி ஃபகிர்' என்ற நாவலை தழுவி காமெடி படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தில் தனுஷுடன் பெர்னைஸ் பெஜோ, பர்காத் அப்தி, அபெல் ஜப்ரி, எரின் மோரியார்டி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.  

வருகிற மே 30-ஆம் தேதி இந்த படம் பிரான்சில் ரிலீசாக இருக்கிறது. தமிழிலும் அதேநாளில் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. 

செய்திகள்
செவ்வாய் June 19, 2018

 11 வருடங்கள் கழித்து இப்போது தான் அவர் நடித்து வெளிவந்த  இரும்புத்திரை  படம் மிகப் பெரிய வசூல் படமாக அமைந்துள்ளது