தனித் தமிழீழமே ஒரே தீர்வு- புகழேந்தி அழைப்பு

வெள்ளி மே 06, 2016

‘வட்டுக்கோட்டை தீர்மானம்’ நிறைவேற்றப்பட்டதன் 40வது ஆண்டாக 2016 ஆம் ஆண்டு சிறப்புப்பெற்றுள்ளது. தந்தை செல்வநாயகம் தலைமையில் வட்டுக்கோட்டை தீர்மானம் நிறைவேற்றப்பட்டதன் நாற்பதாவது ஆண்டாக 2016 ஆம் ஆண்டு அமைந்துள்ளது.

தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும் தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும் “வட்டுக்கோட்டை தீர்மானம்” நிறைவேற்றப்பட்டதன் நாற்பதாவது ஆண்டாக வரும் 2016 ஆம் ஆண்டு அமைந்துள்ளது.சத்தியத்தின் மீது கட்டியெழுப்பப்பட்ட இலட்சியத்திற்காகத் தமது சுயநல இன்பங்களைத் துறந்து சாவினைத் தழுவிய மாவீரர்களின் தியாக வரலாற்றின் பிரவாகமானது தமிழ் மக்களை தலைநிமிர வைத்தது.

 யேர்மனியில் நடைபெறும் வரலாற்று முக்கியத்துவம் கொண்ட  இந் நிகழ்வில் "வட்டுக்கோட்டை 40 " மாநாட்டில் இணையவழி ஊடாக இயக்குனர் புகழேந்தி ஐயா அவர்களும் கலந்துகொள்கின்றார்.

தொடர்புகட்கு : vaddukkoddai40@gmail.com